முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிருக பலத்துடன் தி.மு.க ஆட்சி அமையும்: அமைச்சர் சேகர்பாபு

வியாழக்கிழமை, 13 பெப்ரவரி 2025      தமிழகம்
Sekar-Babu 2023-04-20

Source: provided

சென்னை: 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில், தமிழக மக்கள்  மிருக பலத்துடன் தி.மு.க. -வை மீண்டும் ஆட்சியில் அமரவைப்பார்கள் என்று அமைச்சர் சேகர்பாபு பதிலளித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு,   “அறிவாலயத்தை அசைத்துப் பார்க்க வேண்டும் என்று நினைத்தவர்கள், அடங்கி மண்ணோடு மண்ணாக போனதுதான் கடந்தகால வரலாறு. எப்போதெல்லாம் தி.மு.க. வை அழிக்க வேண்டும் என்று புறப்படுகிறார்களோ, எப்போதெல்லாம் தி.மு.க. வை அழிப்பேன் என்று கூறுகிறார்களோ, அப்படி கூறுபவர்களின் அழிவுக்கான தொடக்கப்புள்ளிதான் அது என்பது பொருள்.

தி.மு.க. வின் ஆலயமாக கருதப்படுகின்ற, அறிவாலயத்தை அண்ணாமலையால் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது. அவரால் எப்படி செங்கல் கற்களை அகற்ற முடியும். இரும்பு மனிதரான தமிழக முதல்வர் தொட்டு, 75 ஆண்டுகளைக் கடந்த இந்த தி.மு.க. -வை அசைத்துப் பார்ப்பதற்கு இன்னொருவர் பிறந்து வரவேண்டும். இவர்களுடைய ஆணவப் பேச்சுக்கு தமிழக மக்கள், 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் மிருக பலத்துடன் தி.மு.க. -வை மீண்டும் ஆட்சியில் அமரவைப்பார்கள்.

2026-ம் ஆண்டு நடைபெறுகிற சட்டமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில் போட்டியிட்டு வென்று முதலில் சட்டமன்ற உறுப்பினராக அண்ணாமலை தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். அவர் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை புறமுதுகிட்டு ஓடச்செய்ய தி.மு.க. -வின் கடைக்கோடி தொண்டனை நிற்க வைத்து , தமிழக முதல்வர் அண்ணாமலையை மண்ணைக் கவ்வச் செய்வார்.” என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து