முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலையுதிர் காலம் போல் கட்சிக்கு இது களையுதிர் காலம்: சீமான்

சனிக்கிழமை, 22 பெப்ரவரி 2025      தமிழகம்
Seeman 2023 01 22

Source: provided

மதுரை : ''கட்சிக்கு இது களையுதிர் காலம். கட்சியில் இருந்து இயங்குவதற்கும், வெளியேறி செல்வதற்கும் காளியம்மாளுக்கு முழு உரிமை உண்டு,'' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

மதுரையில் நிருபர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது: இந்த கட்சியில் முழு சுதந்திரம் இருக்கிறது. விரும்பி இயங்குவதற்கும், விருப்பம் இல்லையெனில் வெளியேறுவதற்கும் முழு சுதந்திரம் இருக்கிறது. இது ஒரு ஜனநாயக அமைப்பு. தங்கச்சியை (காளியம்மாள்) நான் தான் அழைத்து வந்தேன்.

அவங்களுக்கு எல்லா சுதந்திரமும் இருக்கிறது. பக்கத்துல நிற்பவர் கூட நாளைக்கு வேறு ஒரு அமைப்புக்கு போகலாம். வரும்போது வாங்க வாங்க வணக்கம் என்போம். போகும்போது போங்க ரொம்ப நன்றி வாழ்த்துக்கள் என்று சொல்வோம். இது எங்களுடைய கொள்கை. பருவ காலத்தில் இலையுதிர் காலம் இருக்கிறது. எங்க கட்சிக்கு இது களையுதிர் காலம்.

காளியம்மாளுக்கு முழு சுதந்திரம் இருக்கிறது. கட்சியிலேயே இருக்கிறதா, கட்சியை விட்டு வேறு இடத்தில் சென்று இயங்குவதா என்று முடிவு எடுக்கும் உரிமை அவருக்கு இருக்கிறது. புதிய கல்வி கொள்கையை தி.மு.க., எதிர்ப்பது என்பது பொய். எங்கள் மொழி மீது எங்களுக்கு பற்று இருப்பது தேசத்துரோகம் அல்ல. மும்மொழியில் எம்மொழி இருக்க கூடாது என்ற கேள்வி எல்லாருக்கும் வரும். எல்லா மொழியையும் ஆட்சி மொழியாக்க வேண்டும். இந்த நாட்டில் உள்ள மக்களுக்கு அவர்கள் மொழி தாய்மொழி. ஆங்கிலம் பயன்பாட்டு மொழி. விரும்பினால் எம்மொழியும் கற்றுக்கொள்ளலாம் என்பது தான் கொள்கையாக தான் இருக்க வேண்டும். விருப்பம் என்றால் பன்மொழி கற்கலாம் என்று கொண்டு வாருங்கள். இவ்வாறு சீமான் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 5 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 5 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 4 hours ago
View all comments

வாசகர் கருத்து