முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாவூர்சத்திரம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்து தி.மு.க.வினர் போராட்டம்

திங்கட்கிழமை, 24 பெப்ரவரி 2025      தமிழகம்
Pavyrcgatrn-2025-02-24

தென்காசி, தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்து தி.மு.க.வினர் நேற்று (பிப்.24) போராட்டம் நடத்தினர்.

இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இந்நிலையில், தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்து தி.மு.க.வினர் நேற்று போராட்டம் நடத்தினர். ரயில் நிலைய நுழைவு வாயிலில் உள்ள பெயர் பலகை, நடைமேடையில் உள்ள பெயர் பலகை, மின்சார எச்சரிக்கை பலகை போன்றவற்றில் உள்ள இந்தி எழுத்துகளை அழித்தனர்.

கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சீனித்துரை தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. முன்னாள் செயலாளர் சிவ பத்மநாதன் கலந்துகொண்டு, இந்தி எழுத்தகளை அழித்தார். அப்போது, இந்தி திணிப்பை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும், தமிழ் வாழ்க என்றும் தி.மு.க.வினர் முழக்கமிட்டனர்.

இந்த போராட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் ஏ.பி.அருள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோ, முன்னாள் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் மேகநாதன், மாவட்ட விவசாய அணி துணைத் தலைவர் செல்வன், தொண்டரணி துணை அமைப்பாளர் சுப்பிரமணியன், மாவட்ட பிரதிநிதிகள் சமுத்திரப்பாண்டி, அன்பழகன், வளர்மதி ராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் ஆலங்குளம் தொலைபேசி நிலையம், அஞ்சல் அலுவலகத்தில் இந்தி எழுத்துகளை தி.மு.க.வினர் அழித்து போராட்டம் நடத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து