முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரி சட்டப்பேரவையில் மார்ச் 10-ல் பட்ஜெட் தாக்கல்

செவ்வாய்க்கிழமை, 25 பெப்ரவரி 2025      இந்தியா
Rangasamy 2023 07-16

Source: provided

புதுச்சேரி : புதுச்சேரியில் வரும் மார்ச் 10-ம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூடுகிறது. மார்ச் 12-ல் பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்கிறார் என்று சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் தெரிவித்தார். 

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேரவைத்தலைவர் செல்வம் கூறியதாவது: “புதுச்சேரி சட்டப்பேரவையின் ஆறாவது கூட்டத்தொடர் வரும் மார்ச் 10-ல் காலை 9.30 மணிக்கு கூடுகிறது. அப்போது துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உரையாற்றுகிறார். அதைத்தொடர்ந்து மார்ச் 12ம் தேதி காலை 9.30 மணிக்கு வரும் 2025-26 பட்ஜெட்டை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்கிறார். அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் கூடி இக்கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடக்கும் என்று முடிவு செய்யும்.

இந்த அரசு பதவியேற்று தேர்தல் காலங்களைத் தவிரத்து இரண்டாவது முறையாக முழு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. பாலங்கள், சாலை விரிவாக்கப் பணிகளுக்கு ரூ.1000 கோடி தர ஒப்புதல் தந்து மத்திய அமைச்சர் நிதின்கட்கரி முதல்வர் ரங்கசாமிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். பேரவைக்கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு விரைவில் ஒப்புதல் கிடைத்துவிடும். ஏறக்குறைய 90 சதவீதம் பட்ஜெட் நிதி செலவிடப்பட்டுள்ளது. மார்ச் 31க்குள் முழுமையாக செலவிடப்படும்.

அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டனர். தற்போது ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். துறை தலைவர்கள் ஓரிரு நாட்களில் மாற்றப்படுவார்கள். விரைவில் முழுமையாக துறைகள் முழுமையாக இயங்கும். புதுச்சேரி அரசு வைத்த கோரிக்கைக்கு நிதியை ஒதுக்கியுள்ளது. ரூ.3200 கோடி கோரியிருந்தோம் ரூ.1000 கோடி தருவதாக தெரிவித்துள்ளனர். அதற்கான கூட்டத்துக்கு தலைமைச்செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் டெல்லி செல்கின்றனர். எம்எல்ஏக்கள் தங்கள் கடமையை நல்ல முறையில் செய்யவேண்டும். ஒருமையில் பேசுவது, மற்றவர்களை தரம் தாழ்த்தி பேசுவதை பேரவையில் அனுமதிக்கமாட்டோம். சட்டமன்ற விதிகளுக்கு புறம்பாக நடந்தால் அதற்கான விடை பேரவையில் அறிவிக்கப்படும்'' என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து