முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாம்பியன் டிராபி தொடரில் அரையிறுதி வாய்ப்பு யாருக்கு?

செவ்வாய்க்கிழமை, 25 பெப்ரவரி 2025      விளையாட்டு
INDIA-PAK 2025-02-22

Source: provided

ராவல்பிண்டி : ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா போட்டி கைவிடப்பட்டதால் அரையிறுதி வாய்ப்பு யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.

தலா ஒரு முறை... 

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேச அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இந்த தொடரில் தற்போது வரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் குரூப் ஏ-வில் இருந்து இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

மழையால் ரத்தானது... 

பாகிஸ்தான், வங்காளதேசம் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின. அதேசமயம், குரூப் பி-யில் இருந்து எந்த இரு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், இந்த தொடரில் நேற்று ராவல்பிண்டியில் நடைபெறும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதவிருந்தன. மழை பெய்வதன் காரணமாக டாஸ் போடுவதில் கூட தாமதம் ஏற்பட்டது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் ஆட்டம் ரத்தானதாக அறிவிக்கப்பட்டு 2 அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. 

தென் ஆப்பிரிக்காவுக்கு...

போட்டி மழையால் கைவிடப்பட்டதால், ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு தலா ஒரு புள்ளி கிடைத்துள்ளது. ஏற்கனவே இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 2 புள்ளிகளை பெற்றிருப்பதால் இது அவர்களுக்கு 3வது புள்ளியாக கிடைக்கும். ரன் ரேட் அடிப்படையில் தென் ஆப்பிரிக்கா (+2.140) முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா (+0.475) 2வது இடத்திலும் இருக்கும்.

இரண்டிலும் வெற்றி....

இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் புள்ளிப்பட்டியலில் (நேற்றைய போட்டி ரத்தானதால்) 3வது மற்றும் 4வது இடத்தில் இருக்கும். இங்கிலாந்து அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் உள்ளன. ஆப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இரண்டிலும் வெற்றி பெற்றால், அவர்கள் 4 புள்ளிகளைப் பெறலாம். அப்படி நடந்தால் தென் ஆப்பிரிக்கா தொடரில் இருந்து வெளியேற்றக்கூடும். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இரண்டு ஆட்டங்கள்... 

ஆப்கானிஸ்தானுக்கும் இன்னும் இரண்டு ஆட்டங்கள் உள்ளன. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டிலும் வெற்றி பெற்றால், அவர்களும் 4 புள்ளிகளைப் பெற முடியும். இதனால் ஆஸ்திரேலியா தொடரில் இருந்து வெளியேறும். ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இன்றைய போட்டி ரத்தானால் இந்த பிரிவில் இனிவரும் ஆட்டங்கள் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து