முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெங்கடேஷ் ஐயர் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 25 பெப்ரவரி 2025      விளையாட்டு
Kolkata 2025-02-24

Source: provided

விரைவில் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், வாய்ப்பு கிடைத்தால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை கேப்டனாக வழிநடத்த தயாராக இருப்பதாக அந்த அணியின் ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. இது தொடர்பாக அவர் பேசியதாவது: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை கேப்டனாக வழிநடத்த வாய்ப்பு கிடைத்தால், அதற்கு நான் கண்டிப்பாக தயாராக இருக்கிறேன். எனக்கு தலைமைப் பண்பில் நம்பிக்கை இருக்கிறது. அணியின் தலைவனாக அணியை வழிநடத்துவது மிகப் பெரிய பொறுப்பு. அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்று அணியை வழிநடத்துவதில் எந்த ஒரு குழப்பமும் இல்லை. அணியை கேப்டனாக வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்தால், கண்டிப்பாக அதனை ஏற்றுக் கொள்வேன். கேப்டன் பொறுப்பை நிராகரிக்க எந்த ஒரு காரணமும் இல்லை என்றார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணைந்த வெங்கடேஷ் ஐயர், அந்த அணியிலிருந்து விடுவிக்கப்பட்டு மெகா ஏலத்தில் அதே அணியால் ரூ.23.75 கோடிக்கு வாங்கப்பட்டார். இதுவரை 51 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள வெங்கடேஷ் ஐயர் 1,326 ரன்கள் குவித்துள்ளார். இதற்கு முன்பாக எந்த ஒரு தொழில்முறை போட்டியிலும் வெங்கடேஷ் ஐயர் கேப்டன் பொறுப்பு வகித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

___________________________________________________________________________________________

இந்தியாவிற்கு சாதகம்: கம்மின்ஸ்

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 2025 போட்டி பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று ஆடாததால், ஹைபிரிட் முறையில் துபையில் இந்திய ஆட்டங்கள் நடைபெறுகின்றன. வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானுடன் துபையில் நடைபெற்ற இரு ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றிபெற்றது. இந்தியாவின் அடுத்த ஆட்டம் வருகிற ஞாயிறன்று (மார்ச் 2) நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறும். நியூசிலாந்து அணி இதுவரை வங்கதேசம், பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியாவுடன் புள்ளிப்பட்டியலில் சமமாக உள்ளனர்.

காயம் காரணமாக சாம்பியன்ஸ் கோப்பையில் விளையாட முடியாத நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் இதுகுறித்து  பேசியதாவது: ”இவ்வாறு போட்டி தொடர்வது நல்லது என்றே நான் நினைக்கிறேன். ஆனால், ஒரே மைதானத்தில் விளையாடுவது இந்தியாவுக்கு சாதகமாக அமையும். அவர்கள் ஏற்கனவே வலுவான அணியாக உள்ளனர். அத்துடன், அனைத்துப் போட்டிகளையும் ஒரே மைதானத்தில் ஆடுவது அவர்களுக்கு கூடுதலாக பலனளிக்கும்” என்றார். மேலும், ”வீட்டில் இருந்து எல்லாவற்றையும் பார்ப்பது நன்றாக இருக்கின்றது. கணுக்கால் காயம் குணமாகி வருகின்றது. இந்த வாரம் மீண்டும் ஓட்டப் பயிற்சி மற்றும் பந்துவீச்சைத் தொடங்கவுள்ளேன்” என்று கம்மின்ஸ் கூறினார்.

___________________________________________________________________________________________

சிறந்த வீரரை பார்த்ததில்லை - பாண்டிங் பாராட்டு

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் அரையிறுதி வாய்ப்பையும் ஏறக்குறைய உறுதி செய்து விட்டது. விராட் கோலியை பல முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் பாரட்டி வருகின்றனர். அந்த வரிசையில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் 50 ஓவர் கிரிக்கெட்டில் விராட் கோலி போன்று சிறந்த வீரரை தான் பார்த்தது இல்லை என்று பாராட்டியுள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், "பெரிய போட்டிகளுக்கு சமமான வீரர்கள் வேண்டும் என்று நான் எப்போதும் சொல்வேன். அழுத்தமான நேரத்தில் அசத்தக்கூடிய பெரிய வீரர் தேவை. இந்திய அணிக்கு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை விட பெரிய போட்டி இல்லை. சர்வதேச போட்டிகளில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை பொறுத்தே உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். எனவே கோலி சிறப்பாக விளையாடியதில் எனக்கு ஆச்சரியம் இல்லை. இந்த போட்டியில் பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ததை விட அவர்களுக்கு சாதகமான விஷயம் கிடையாது. எனவே அந்த போட்டியை வெல்வதற்கு டாப் ஆர்டரில் சிறப்பாக விளையாடுவதற்கு ஒருவர் தேவைப்பட்டார். அதனை விராட் கோலி மீண்டும் செய்து முடித்தார் என கூறினார். 

___________________________________________________________________________________________

ஸ்மிருதி மந்தனா வருத்தம்

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூரு - உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 180 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த உ.பி. வாரியர்ஸ் அணியும் 20 ஓவர்களில் 180 ரன்கள் எடுத்தது. இதன் காரணமாக ஆட்டம் 'டை' ஆனது. இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த உ.பி.வாரியர்ஸ் அணி 8 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 9 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பெங்களூரு அணி 4 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து சூப்பர் ஓவர் முறையில் பெங்களூருவை வீழ்த்தி உ.பி.வாரியர்ஸ் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் தோல்வி கண்ட பின்னர் பெங்களூரு கேப்டன் ஸ்மிருதி மந்தனா அளித்த பேட்டியில் கூறியதாவது, இந்த தோல்வி மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. இப்போட்டியில் நாங்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் நிறைய விஷயங்களைச் சரியாகச் செய்தோம். நாங்கள் இந்த தோல்வியை ஏற்றுக்கொண்டு வலுவாக மீண்டு வருவோம். இந்தப் போட்டியில் நான் சோபிக்க தவறினேன். அதனால் சில விஷயங்களில் உழைத்து வலுவாக மீண்டு வருவேன். எல்லிஸ் பெர்ரி போன்ற ஒரு ஆல் ரவுண்டர் எங்கள் அணியில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், அவரின் பந்துவீச்சு எங்களுக்கு மிகவும் முக்கியமானது. அனைத்து பந்து வீச்சாளர்களும் மிகச் சிறப்பாக பந்து வீசினர். கிரிக்கெட்டில் இதுபோன்ற விஷயங்கள் நடக்கும். அதனால் இதிலிருந்து நாங்கள் முன்னேறுவோம் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து