முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் ஒருபோதும் மொழிப்போர் நடக்கப் போவதில்லை: கவர்னர் பேச்சு

வெள்ளிக்கிழமை, 28 பெப்ரவரி 2025      தமிழகம்
RN-Ravi 2023 04 03

Source: provided

திருநெல்வேலி : பொய்களை பரப்புவதால் ஒருபோதும் மொழிப்போர் நடக்கப் போவதில்லை என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் செங்குளம் தனியார் திருமண மண்டபத்தில் அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் ‘மகாவிஷ்ணுவின் அவதாரம் அய்யா வைகுண்டர்’ என்ற நூல் வெளியிடப்பட்டது. தமிழ், ஆங்கிலம், மலையாளம், இந்தி உள்ளிட்ட நான்கு மொழிகளில் பதிப்பிக்கப்பட்ட இந்த நூலை கவர்னர் ரவி வெளியிட்டார். 

தொடர்ந்து உரையாற்றிய கவர்னர் ஆர். என்.ரவி, “சனாதன தர்மத்தை பாதுகாப்பதற்காகவே மகாவிஷ்ணு அய்யா வைகுண்டரின் அவதாரமாக வந்தார். உலகில் பல்வேறு பகுதிகளில் போர் நடக்கும் சூழலில் அய்யா வைகுண்டரின் போதனைகள் மிக முக்கியமானவை.  உலகின் மிக முக்கியமான தலைவராக உயர்ந்திருக்கும் பிரதமர் மோடி நாட்டின் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.  குறிப்பாக தமிழகத்தில் கருத்து வேறுபாட்டுடன் வேறு கட்சியின் ஆட்சி நடைபெற்றாலும் தேவையான நிதியை தமிழகத்துக்கு வழங்கி பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தில் தற்போது 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.  

66 கோடி மக்கள் மகா கும்பமேளாவில் நீராடி உள்ளது சனாதனத்தின் மிகப்பெரிய சாட்சி. காசிக்கும் தமிழகத்துக்குமான உறவு, காசி தமிழ்ச் சங்கம் மூலம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய சூழலில் தமிழகத்தில் சிலர் மொழிப்போரை தூண்டுகின்றனர். தற்போது மொழிப்போர் தேவையில்லாத ஒன்று . மேலும் ஒருபோதும் அது வெற்றி பெறாது. தமிழக மக்கள் விழித்துக் கொண்டுள்ளனர். தமிழகத்தில் மக்கள் சுதந்திரமாக இல்லை. அவர்கள் விரும்பும் மொழியை தேர்ந்தெடுக்கும் உரிமை மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

தமிழகத்தில் யாரும் மொழியை திணிக்கவில்லை. எதை படிப்பது என்பதை தேர்ந்தெடுக்க முடியாத சூழலில் குழந்தைகளும் இளைஞர்களும் தமிழகத்தில் இருக்கின்றனர். இங்கு இளைஞர்களின் வளர்ச்சிக்கு தடையும் அநீதியும் இழைக்கப்படுகிறது. பொய்களை பரப்புவதால் ஒருபோதும் மொழிப்போர் நடக்கப் போவதில்லை,” என்று அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து