முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மற்றுமொரு சாதனைக்கு தயாராகும் விராட் கோலி

வெள்ளிக்கிழமை, 28 பெப்ரவரி 2025      விளையாட்டு
Virat-Kohli 2023 08 11

Source: provided

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விராட் கோலி மேலும் ஒரு சாதனையை படைக்கவுள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி... 

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன.  இதில் குரூப் - ஏ பிரிவிலிருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி விட்டன. குரூப் - பி பிரிவில்   அரையிறுதிக்கு தகுதி பெறும் 2 அணிகளின் இடத்திற்கு ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த தொடரில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்தை வரும் 2ம் தேதி எதிர்கொள்கிறது.

அதிக முறை 50+...

இந்நிலையில், நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விராட் கோலி இன்னும் ஒரு அரைசதம் அல்லது சதம் அடித்தால் மாபெரும் சாதனை ஒன்றை படைப்பார். அதாவது, தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரலாற்றில் இந்திய வீரர் ஷிகர் தவான் தலா மூன்று அரை சதங்கள் மற்றும் மூன்று சதங்கள் என ஆறு முறைக்கு மேல் 50+ ரன்கள் எடுத்துள்ளார்.

முதல் இடத்தில் தவான்...

இந்தப்பட்டியலில் ஷிகர் தவான் முதல் இடத்திலும், இவரை தொடந்து கங்குலி (தலா மூன்று அரை சதங்கள் மற்றும் மூன்று சதங்கள்) 2ம் இடத்திலும் உள்ளனர். தற்போது விராட் கோலி சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் 50 ரன்களுக்கு மேல் ஆறு முறை எடுத்திருக்கிறார். இதில் ஒரு சதம் மற்றும் ஐந்து அரை சதங்கள் அடங்கும். இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விராட் கோலி இன்னும் ஒரு அரை சதம் எடுத்தால், சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிக முறை 50+ ரன்கள் எடுத்த வீரர் என்ற மாபெரும் சாதனையை படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து