முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜய்யை விமர்சிக்க தி.மு.க.வில் திடீர் தடை? பரபரப்பு தகவல்கள்

செவ்வாய்க்கிழமை, 4 மார்ச் 2025      தமிழகம்
Vijay- 2024-06-28

சென்னை, த.வெ.க. தலைவர் விஜய்யை விமர்சிக்க தி.மு.க.வினருக்கு தடை விதித்ததற்கான காரணம் தெரிய வந்துள்ளது.

 தமிழகம் மட்டுமல்லாது கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு  சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 13 மாதங்களே இருப்பதால் அரசியல் கட்சிகள் எல்லாம் தேர்தலை எதிர்கொள்ள இப்போதே தயாராகிவருகின்றன.

தமிழகத்தில் கடந்த முறை அ.தி.மு.க. தொடர் வெற்றியை (2011, 2016-ம் ஆண்டுகளில்) பெற்றதுபோல், இந்த முறை நாம் பெற்றுவிட வேண்டும் என்று தி.மு.க. கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கிறது.   இந்த நிலையில், வரும் 14-ந் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள  பட்ஜெட்  குறித்து ஆலோசனை நடத்துவதற்காக கடந்த மாதம் (பிப்ரவரி) 25-ந் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

பட்ஜெட்டையும் தாண்டி அரசியல் குறித்தும் பேசப்பட்டதாக பரபரப்பாக கூறப்படுகிறது. கூட்டத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின், "அமைச்சர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய வெற்றியை மட்டுமல்லாது, மாவட்டத்தில் உள்ள பிற தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றியையும் உறுதி செய்ய வேண்டும்" என்று கூறியிருக்கிறார். மேலும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை பற்றி யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம்" என்று அவர் கூறியுள்ளாராம்.  'விஜய் பற்றிய விமர்சனங்கள் கூடாது' என்ற உத்தரவு அமைச்சர்களையும், தி.மு.க. தொண்டர்களையும் யோசிக்க செய்துள்ளது.

இதுகுறித்து, அரசியல் விமர்சகர் ஒருவரிடம் கேட்டபோது, "பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் ஒவ்வொரு கருத்துக்கும் பதில் அளித்ததால் தான் இன்றைக்கு அவர் அரசியலில் முக்கியத்துவம் பெற்றுவிட்டார். அதேபோன்ற நிலையை விஜய்க்கும் ஏற்படுத்திவிடக்கூடாது என்பதால் தி.மு.க. தலைமை இந்த முடிவை எடுத்திருக்கலாம்" என்று கருத்து தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து