முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைத்து கட்சி கூட்டத்தில் 56 கட்சிகள் பங்கேற்பு: 5 கட்சிகள் புறக்கணிப்பு

புதன்கிழமை, 5 மார்ச் 2025      தமிழகம்
Anbumani 2024-12-29

Source: provided

சென்னை : மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக, தமிழக அரசின் சாா்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நேற்று காலை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் 56 கட்சிகள் பங்கேற்றன. 5 கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன.

தென்னிந்திய மாநில பிரதிநிதிகள் அடங்கிய “கூட்டு நடவடிக்கை குழு” அமைப்பதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தொகுதி மறுவரையறை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிற மாநில முதல்வர்களை நேரில் சந்தித்து ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்துயுள்ளார். மேலும், தென்மாநில பிரதிநிதிகள் அடங்கிய கூட்டுக்குழுவை விசிக வரவேற்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக, தமாகா தவிர திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக, விசிக, மனிதநேய மக்கள் கட்சி, மக்கள் நீதி மய்யம், தமிழக வெற்றிக் கழகம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஆதித்தமிழர் பேரவை, முக்குலத்தோர் புலிப்படை, மூவேந்தர் முன்னேற்றக்கழகம் என மொத்தமாக 56 கட்சிகள் பங்கேற்றன.

மதிமுக சார்பில் வைகோ, காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை, அதிமுக சார்பில் ஜெயக்குமார், பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ், விசிக சார்பில் திருமாவளவன், இடதுசாரிகள் சார்பில் முத்தரசன், பெ.சண்முகம், மநீம சார்பில் கமல்ஹாசன், தவெக சார்பில் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள தமிழக கட்சிகள் அனைத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், 56 கட்சிகள் பங்கேற்றன. பாஜக, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் நாம் தமிழர், புதிய நீதிக்கட்சி ஆகிய கட்சிகள் அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து