முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓமர்சாய் ஆல்-ரவுண்டரில் முதலிடம்

புதன்கிழமை, 5 மார்ச் 2025      விளையாட்டு
Afghan 2024-05-04

Source: provided

சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் ஒரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிரா (மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது) ஆகியவற்றின் மூலம் அரையிறுதி வாய்ப்பை இழந்தது. என்றாலும் இங்கிலாந்து அணிக்கு எதிராக 325 ரன்கள் குவித்து 8 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதற்கு அந்த அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான அஸ்மதுல்லா ஓமர்சாய் முக்கிய காரணமாக இருந்தார். அவர் 31 பந்தில் 41 ரன்கள் விளாசினார். மேலும், 9.5 ஓவர்களில் 58 ரன்கள் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட் சாய்த்தார்.

அத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கைவிடப்பட்ட போட்டியில் 63 பந்தில் 67 ரன்கள் விளாசினார். மேலும் தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் ஐசிசி நேற்று வெளியிட்டுள்ள ஒருநாள் போட்டிக்கான ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் அஸ்மதுல்லா ஓமர்சாய் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். 3-வது இடத்தில் இருந்து தற்போது 2 இடங்கள் முன்னேறி முதல் இடத்தை பிடித்துள்ளார். மற்றொரு ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி முதல் இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கு சரிந்துள்ளார். ஜிம்பாப்வே வீரர் சிகந்தர் ரசா 2-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு சரிந்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து