முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாதனைகளைவிட அணியின் வெற்றியே முக்கியம்: கோலி

புதன்கிழமை, 5 மார்ச் 2025      விளையாட்டு
Virat-Kohli 2023 08 11

Source: provided

துபாய் : சாதனைகளைவிட அணியின் வெற்றிதான் முக்கியம் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.

5-வது முறையாக....

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபிக்கான முதலாவது அரையிறுதிப் போட்டியில் அசத்தலாக விளையாடிய இந்திய 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்கள் சரியாக சோபிக்காத நிலையில் 3-வது விக்கெட்டுக்கு கைகோர்த்த விராட் கோலி - ஷ்ரேயஸ் இருவரும் நிதானமாக விளையாடி 91 ரன்கள் பாட்னர்-ஷிப் அமைத்தனர். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 84 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இருப்பினும் ஆட்டநாயகன் விருது விராட் கோலிக்கு வழங்கப்பட்டது.

பாட்னர்-ஷிப் முக்கியம்...

விருது வழங்கிய பின்னர் விராட் கோலி பேசுகையில், “ஆட்டம் தொடங்கியது முதலே மெதுவாக விளையாடினேன். பாகிஸ்தான் போட்டியைப் போன்றுதான் இங்கேயும் மெதுவாக ஆடினேன். சூழலை உணர்ந்து அதற்கேற்ப ஆட வேண்டும். ஒரு ரன்கள் மற்றும் இரண்டு ரன்கள் எடுப்பதில் அதிக கவனம் செலுத்தினேன். ஆட்டத்தின் போக்கை கவனத்தில் கொண்டு பாட்னர்-ஷிப் அமைப்பது மிகவும் முக்கியமானது. 

சதம் கவலையில்லை...

நமக்கு தடையாக இருக்கும் விஷயங்களைப் பற்றி கவலைப்படக்கூடாது. நான் அதைப் பற்றி கண்டுகொள்வதில்லை. அதைப் பற்றி பேசுவதும் இல்லை. நீங்கள் சாதனைகளை எதிர்பார்க்காமல் விளையாடினால் போதும் அது உங்களை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும். நான் என்னுடைய சதத்தைப் பற்றி கவலையடையவில்லை. என்னுடைய அணியின் வெற்றிக்கு எது தேவையோ அதைத்தான் செய்தேன்” எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து