முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டாஸ்மாக் போராட்டம்: தமிழிசை உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு

செவ்வாய்க்கிழமை, 18 மார்ச் 2025      தமிழகம்
Tamilsai 2024-05-02

Source: provided

சென்னை: அனுமதியின்றி போராட்டம் நடத்த முயன்றதாக பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழலை கண்டித்து சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என தமிழக பா.ஜனதா அறிவித்தது. இதையடுத்து நேற்று முன்தினம் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம், டாஸ்மாக் தலைமை அலுவலகம் அமைந்துள்ள தாளமுத்து நடராசன் மாளிகை, பாந்தியன் சாலை, சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை ஆகிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டனர்.  

இதனிடையே சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் இருந்து போராட்டம் நடத்த வெளியே வந்த தமிழிசை சவுந்தரராஜனை போலீசார் கைது செய்தனர். இதேபோன்று எழும்பூரில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட வந்த பா.ஜ.க. மூத்த தலைவர் ஹெச்.ராஜா, முன்னாள் மத்திய இணைமந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், கரு.நாகராஜன், அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.

தலைமைச் செயலகத்தில் இருந்து போராட்டம் நடக்கும் பகுதிக்கு சென்ற பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் வானதி சீனிவாசன், சரஸ்வதி ஆகியோரும் கைதுசெய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.   இதற்கிடையே, சென்னையில் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்பட 100 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதன்படி நீலாங்கரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் அனுமதி இன்றி போராட்டம் நடத்த முயன்ற தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட 86 பேர் மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பொன். ராதாகிருஷ்ணன், ஹெச். ராஜா, கரு.நாகராஜன், வினோஜ் பி செல்வம் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து