முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாட்டு மீனவர்கள் 3 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

செவ்வாய்க்கிழமை, 18 மார்ச் 2025      தமிழகம்
Fissherman 2024-12-02

Source: provided

ராமேஸ்வரம்: எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையிலும், இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவம் மட்டும் தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறது.

இந்நிலையில், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், மீனவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளனர். எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை குற்றம் சாட்டி உள்ளது. கைது செய்யபட்ட மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு இலங்கை கடற்படையினர் அழைத்து சென்றனர். விசாரணைக்கு பிறகு மீனவர்களை படகுடன், மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து