முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மீனாட்சியம்மன் கோவில் நடை சாத்தப்பட்டது

செவ்வாய்க்கிழமை, 18 மார்ச் 2025      தமிழகம்
Meenakshiyamman 2024-03-19

Source: provided

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நடை நேற்று சாத்தப்பட்டது.

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் விசேஷ நிகழ்ச்சியாக நேற்று முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி கோவிலுக்குள் உள்ள ஆறுகால் மண்டபத்தில் முருகப்பெருமான் எழுந்தருளினார்.

திருவிழாவின் முத்தாய்ப்பாக நேற்று முருகப்பெருமான் தெய்வானைக்கு மங்கல நாண் சூடும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி நேற்று அதிகாலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து சுந்தரேசுவரர் பிரியாவிடையுடனும், மீனாட்சி அம்மனும் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர்.

இதேசமயம் திருப்பரங்குன்றம் கோவிலில் இருந்து மேள தாளங்கள் முழங்க தெய்வானையுடன் முருகப்பெருமான் புறப்பட்டு பசுமலை மூலக்கரையில் உள்ள சந்திப்பு மண்டபத்திற்கு வரும் நிகழ்வு நடக்கிறது. இதனையடுத்து மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரருக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. பின்னர் பகல் 1 மணி அளவில் முருகப்பெருமான், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று காலை 6 மணிக்கு கிரிவலப்பாதையில் தேரோட்டம் நடக்கிறது. 

இதனையொட்டி ஏராளமான பக்தர்கள் திருப்பரங்குன்றத்தில் குவிந்து வருகிறார்கள். இந்த நிலையில் திருப்பரங்குன்றம் முருகன்கோவில் திருக்கல்யாணத்தை ஒட்டி மதுரை மீனாட்சியம்மன் கோயில் நடை நேற்று சாத்தப்பட்டது. எனினும், ஆடி வீதி மற்றும் ஆயிரங்கால் மண்டபத்தில் வழக்கம்போல் பக்தர்கள் அனுமதிக்கப்படார்கள். திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பங்குனி திருவிழாவை ஒட்டி நேற்று திருக்கல்யாணம் நடைபெறுவதை ஒட்டி, திருக்கல்யாணத்தில் மீனாட்சி-சுந்தரேஸ்வரர் சுவாமிகள் பங்கேற்பதால் கோவில் நடை அடைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து