முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பூமி திரும்பும் முன்பு சுனிதா வில்லியம்ஸ் நாசா வெளியிட்ட புகைப்படம்

செவ்வாய்க்கிழமை, 18 மார்ச் 2025      உலகம்
Nasa

Source: provided

அமெரிக்கா: பூமி திரும்புவதற்கு முன்பு விண்வெளியில் தனது குழுவினருடன் சுனிதா வில்லியம்ஸ் புகைப்படம் எடுத்துக்கொண்டார். 

சா்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 9 மாதங்களாக சிக்கியுள்ள இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், மற்றொரு விண்வெளி வீரரான வில்மோா் உள்ளிட்டோரை பூமிக்கு திரும்ப அழைத்து வர அனுப்பட்ட அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலன் வெற்றிகரமாக சென்றடைந்தது.  டிராகன் விண்கலனில் அவர்கள் பூமி திரும்பவுள்ளனர். சற்று நேரத்தில் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் விடுவிக்கப்படவுள்ளது. இதற்காக பூமி திரும்பவுள்ள வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

இதனிடயே பூமி திரும்பும் உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பு சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோா்ம், நிக் ஹாவுக், ரஷியாவைச் சேர்ந்த அலெக்சாண்டர் கோர்புனோவ் உள்ளிட்டோர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். சரியாக நேற்று  மாலை 5.57 மணிக்கு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தையொட்டி கடல் பகுதிக்கு டிராகன் விண்கலம் வந்துசேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் விடுவிக்கப்படும் காட்சி, பூமிக்கு வந்துசேரும் காட்சிகள் அனைத்து நேரடியாக நாசா ஒளிபரப்பு செய்யவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து