முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. மகா கும்பமேளாவின்போது நாட்டின் பிரம்மாண்டத்தை கண்டு உலகம் வியந்தது பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு

செவ்வாய்க்கிழமை, 18 மார்ச் 2025      இந்தியா
Modi 2024-07-03

Source: provided

புது தில்லி: மகா கும்பமேளாவை வெற்றியடைச் செய்த பக்தர்கள் உள்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்து, மக்களவையில் தனது உரையைத் தொடங்கினார் பிரதமர் நரேந்திர மோடி. மேலும், மகா கும்பமேளாவின்போது, நாட்டின் பிரம்மாண்டத்தை ஒட்டுமொத்த உலகமும் கண்டு வியந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஜன. 13-ஆம் தேதி தொடங்கி, மகா சிவராத்திரி திருநாளான புதன்கிழமை (பிப். 26) வரை மகா கும்பமேளா விழாவானது வெகுவிமா்சையாக நடைபெற்று நிறைவுற்றது. மகா கும்பமேளாவின் வெற்றி குறித்து மக்களவையில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

அவர் முதலில், மகா கும்பமேளாவில் பங்கேற்று, அதனை வெற்றியடையச் செய்த பக்தர்கள் உள்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டு தனது உரையைத் தொடங்கினார். தொடர்ந்து பேசிய அவர், மகா கும்பமேளாவின் முக்கிய விளைவு என்றால் அது ஒற்றுமை என்ற அமிர்தம்தான். நாட்டின் ஒற்றுமையால் கிடைத்த சக்தி, இந்தியாவின் அமைதியைக் குலைக்க நினைத்த அனைத்துச் சக்திகளையும் ஆட்டம்காண வைத்துவிட்டது என்றார்.

வேற்றுமையில் ஒற்றுமை என்பது இந்தியாவின் சிறப்பு, பிரயாக்ராஜில் அதைத்தான் ஒட்டுமொத்த நாடும் அனுபவித்தது. இதனை விட்டுவிடாமல் தொடர்ந்து வளப்படுத்த வேண்டும். இந்தியாவின் புதிய தலைமுறையினருக்கும் மகா கும்பமேளாவுடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவர்களும் நமது பாரம்பரியங்களையும் நம்பிக்கையையும் பெருமையுடன் ஏற்றுக்கொள்கிறார்கள். மகா கும்பமேளாவின் வெற்றி நாட்டின் எழுச்சியை வெளிப்படுத்துகிறது. மகா கும்பமேளாவின்போது, நாட்டின் பிரம்மாண்டத்தை ஒட்டுமொத்த உலகமும் கண்டு வியந்தது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரயாக்ராஜ் நகரில் உள்ள கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பமேளா நடத்தப்பட்டது. எனினும், தற்போதைய வானியல் நிலைகள் காரணமாக 144 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற நடப்பு கும்பமேளா கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக மாறியிருந்தது. தொடக்க நாள்களில் பிரயாக்ராஜில் நிலவிய கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நாள்தோறும் கோடிக்கணக்கான பக்தா்கள் நீராடினா். நிகழ்வு நடந்த 45 நாள்களில் சாதுக்கள், துறவிகள், பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் என சுமாா் 66 கோடிக்கும் மேற்பட்டவா்கள் சங்கமத்தில் புனித நீராடினா்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து மட்டுமல்லாமல் பாகிஸ்தான், அமெரிக்கா, ரஷியா, தென்கொரியா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் உள்பட பல்வேறு உலக நாடுகளில் இருந்து ஹிந்து மதத்தைப் பின்பற்றுவோரும், சுற்றுலாப் பயணிகளும் மகா கும்பமேளாவில் பங்கேற்று, இந்தியாவின் பிரமிப்பான கலாசாரத்தைக் கண்டு வியந்தனா்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து