முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுவிட்சர்லாந்தில் சிறிய ரக விமானம் விபத்து: 3 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 18 மார்ச் 2025      உலகம்
Suicide 2023 04 29

Source: provided

சுவிட்சர்லாந்த்: டென்மார்க் நாட்டு சிறிய விமானம் சுவிட்சர்லாந்தின் மலைத்தொடரில் மோதி விபத்துக்குள்ளானது.

டென்மார்க் நாட்டைச் சேர்ந்த எக்ஸ்ட்ரா ஈஏ-400 எனும் சிறிய ரக விமானம் ஒன்று கடந்த மார்ச் 13 அன்று சுவிட்சர்லாந்து நாட்டிற்கு வந்தடைந்தது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் மாலை 5.20 மணியளவில் மீண்டும் டென்மார்க் செல்வதற்காக சேம்டன் விமானத் தளத்திலிருந்து புறப்பட்ட போது தென்கிழக்கு சுவிட்சர்லாந்திலுள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடர்களில் மோதி விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து, புறப்பட்ட 2 நிமிடங்களில் இந்த விபத்து நிகழ்ந்து அந்த விமானம் முழுவதுமாக எரிந்து சாம்பலானதாக அந்நாட்டு காவல் துறை தெரிவித்துள்ள நிலையில் அதில் பயணித்த 3 பேரும் பலியாகியிருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகின்றது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து தற்போது வரை எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில் இந்த விமானத்தில் பயணித்தவர்களை முறையாக அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்படவுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து