முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல்லூரி மாணவர்களுக்கு தரமான மடிக்கணினி வழங்கப்படும்: : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

வெள்ளிக்கிழமை, 21 மார்ச் 2025      தமிழகம்
Tangam 2025-03-14

Source: provided

சென்னை : கல்லூரி மாணவர்களுக்கு ஒரு மடிக்கணினி ரூ.20,000 என்ற மதிப்பில் தரமான மடிக்கணினி வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு பேரவையில் கூறியுள்ளார்.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 14 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றைய அவை நிகழ்வில், தி.மு.க. அரசில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படவுள்ள மடிக்கணினியின் தரம் பற்றி அதி.மு.க.  எம்.எல்.ஏ. தங்கமணியின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு,

"அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி அல்லது டேப் வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற கணக்கின்படி ஒரு மடிக்கணினியின் விலை ரூ. 10,000 என்று அதி.மு.க. வினர் கூறுகின்றனர்.

இந்த நிதி ஓராண்டுக்குத்தான். அடுத்த ஆண்டும் ரூ. 2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். எனவே, சராசரியாக ஒரு மடிக்கணினியின் மதிப்பு ரூ. 20,000 என்ற அளவிலே இருக்கும். அதனால் மடிக்கணினியின் தரம் குறித்த கவலை நிச்சயமாக உங்களுக்குத் தேவையில்லை. மாணவர்கள் விரும்பி அந்த மடிக்கணினியைப் பயன்படுத்தும் அளவிற்கு தரமான மடிக்கணினி வழங்கப்படும். சட்டப்பேரவை உறுப்பினர்களே பொறாமைப்படக்கூடிய வகையில் அனைத்து உள்ளடக்கங்களுடன் மாணவ, மாணவிகளுக்கு தரமான மடிக்கணினிகள் வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து