முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை சாலைக்கு அஸ்வின் பெயர் சூட்ட முடிவு

வெள்ளிக்கிழமை, 21 மார்ச் 2025      விளையாட்டு
Ashwin 2

Source: provided

சென்னை : சென்னையில் உள்ள ஒரு சாலைக்கு இந்திய வீரர் அஸ்வின் பெயரை சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

சுழற்பந்து ஜாம்பவான்... 

கிரிக்கெட்டின் மிகச் சிறந்த சிந்தனையாளர் என்று அழைக்கப்படும் இந்திய சுழற்பந்து ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். பார்டர் - காவஸ்கர் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணியுடன் சென்ற அஸ்வின், 3-வது போட்டி முடிவில் திடீரென்று ஓய்வை அறிவித்து நாடு திரும்பினார். 106 டெஸ்ட்டில் 537 விக்கெட்டுகள், இதில், 37 முறை 5 விக்கெட்டுகள், 8 முறை 10 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். பல சாதனைகளுக்குச் சொந்தக்காரரான அஸ்வின் தற்போது ஐபிஎல்லில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார்.

பத்மஸ்ரீ விருது... 

கிரிக்கெட்டில் சிறந்த பங்களிப்பை அளித்த அஸ்வினுக்கு கடந்த ஜனவரி மாதம் பத்மஸ்ரீ விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தது. இந்த நிலையில், சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ராமகிருஷ்ணபுரம் 1-வது தெரு ரவிச்சந்திரன் அஸ்வின் வசித்து வருகிறார். அவருக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக அவர் வசித்துவரும் ராமகிருஷ்ணபுரம் 1-வது தெருவுக்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பெயரைச் சூட்ட சென்னை பெருநகர மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அஸ்வின் பெயர்...

அஸ்வினுக்குச் சொந்தமான கேரம் பால் ஈவென்ட் அண்ட் மார்க்கெட்டிங் நிறுவனம், பெயர் மாற்றும் திட்டத்தை குறித்து சென்னை மாநகராட்சியிடம் கோரிக்கை வைத்திருந்தது. அந்த அறிக்கையின்படி, அஸ்வினை கௌரவிக்கும் வகையில் ஆர்ய கௌடா சாலை அல்லது ராமகிருஷ்ணபுரம் 1-வது தெருவின் பெயரை மாற்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு சென்னை மாநகராட்சியும் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வ பெயர் மாற்றம் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து