முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் யூடியூப் பார்த்து தனக்குத்தானே அறுவைச்சிகிச்சை செய்து கொண்டவர்..!

வெள்ளிக்கிழமை, 21 மார்ச் 2025      இந்தியா
YouTube 2024-03-27

Source: provided

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் யூடியூப் பார்த்து தனக்குத் தானே அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட நபர் தற்போது தனது வீட்டில் குணமாகி வருகின்றார்.

மதுரா மாவட்டத்தின் சுன்கார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா பாபு (வயது 32), இவர் கடந்த சில காலமாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால், தனது வயிற்று வலிக்கு தீர்வு காண விரும்பிய அவர் அது குறித்து இணையதளத்தில் ஆராய்ந்துள்ளார். இந்நிலையில், யூடியூபில் அறுவைச் சிகிச்சை செய்யும் விடியோக்களை பார்த்த அவர் அதற்கு தேவையான கத்தி, ஊசிகள் போன்ற மருத்துவ உபகரணங்களை வாங்கியதுடன் கடந்த மார்ச் 18 அன்று தனது வீட்டில் தனக்குத் தானே அறுவைச் சிகிச்சை செய்ய முயன்று தனது வயிற்றை தானே கிழித்து பின்னர் தைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த நேற்று முன்தினம்  அவரது உடல் நிலை மிகவும் மோசமாகியுள்ளது. உடனடியாக அவரது உறவினரான ராஹுல் என்பவர் ராஜா பாபுவை மீட்டு பிருந்தாவனம் மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்குள்ள மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி செய்து ஆக்ராவிலுள்ள எஸ்.என். மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், அவர் ஆக்ரா மருத்துவமனைக்கு செல்லாமல் தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். 

இதுகுறித்து அவரது உறவினரான ராஹுல் கூறியதாவது, அவரது வீட்டில் ஓய்வு பெற்று வரும் ராஜா பாபுவின் காயங்கள் தற்போது குணமாகி அவரது உடல்நிலை முன்னேறி வருவதாகக் கூறியுள்ளார். மேலும், அவர் தனது வயிற்றின் மேல் பகுதியை மட்டுமே கத்தியால் கிழித்துள்ளதாகவும், அதனால் உள்ளுறுப்புகள் எதற்கும் எந்தவொரு பாதிப்பும் இல்லை என அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து