தின பூமி
முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

62 பொருள்களுக்கு புவிசார் குறியீடு: தமிழகத்தில் தஞ்சை சாதனை

செவ்வாய்க்கிழமை, 1 ஏப்ரல் 2025      தமிழகம்
Malai 2025-04-01

Source: provided

தஞ்சாவூர் : தமிழகத்தில் இதுவரை 62 பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அதில் தஞ்சை மாவட்டம் சாதனை படைத்திருப்பதாகவும் வழக்குரைஞர் சஞ்சய் காந்தி கூறியுள்ளார்.

புவிசார் குறியீடு பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வரும் அரசு வழக்குரைஞர் சஞ்சய் காந்தி நேற்று தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு, பாபநாசம், கும்பகோணம் உள்ளிட்ட காவேரி படுகைகளில் மட்டுமே விளையக்கூடிய கும்பகோணம் வெற்றிலை - இதே போல் அரபிக்கடலும் வங்ககடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டுமே செய்யக்கூடிய தோவாளை மாணிக்க மாலை ஆகிய இரண்டு பொருளுக்கும் புவிசார் குறியீடு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இதுவரை 62 பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டு இந்திய அளவில் அதிக புவிசார் குறியீடு பெற்ற மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் தமிழகம் விளங்கி வருகிறது. இதே போல் தமிழகத்திலேயே 11 பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற்று மாநிலத்தில் முதல் மாவட்டமாக தஞ்சை விளங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 days ago
View all comments

வாசகர் கருத்து