முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.சி.சி.ஐ. ஒப்பந்தத்தில் ஏ+ தரத்தை தக்கவைத்த ரோகித், விராட் கோலி? - விரைவில் அறிவிப்பு வெளியீடு

செவ்வாய்க்கிழமை, 1 ஏப்ரல் 2025      விளையாட்டு
Rohit-Kohli-Bumra 2024-07-1

Source: provided

மும்பை : டி20 கிரிக்கெட்டில் ஓய்வுபெற்ற இந்தியாவின் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி ரூ.7 கோடி மதிப்புள்ள தங்களது ஏ+ ஒப்பந்த தரத்தை மீண்டும் தக்கவைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பி.சி.சி.ஐ. ஒப்பந்தம்...

2024-25ஆம் ஆண்டுக்கான பி.சி.சி.ஐ. ஒப்பந்தத்தில் இல்லாத ஷ்ரேயாஸ் ஐயர் சாம்பியன்ஸ் டிராபியில் சிறப்பாக செயல்பட்டார். அதில் கடைசியில் சேர்க்கப்பட்ட வருண் சக்கரவர்த்தியும் அசத்தலாக விளையாடினார். வருண் சக்கரவர்த்தி, நிதீஷ் ரெட்டி, அபிஷேக் சர்மா கடந்த 12 மாதங்களாக சிறப்பாக விளையாடியுள்ளதால் அவர்களுக்கு முதல்முறையாக பி.சி.சி.ஐ. ஒப்பந்தம் கிடைக்குமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

விராட்கோலி, ரோகித்...

ஓய்வு பெற்றாலும் ரோகித், கோலி ஏ+ தரத்திலான ஒப்பந்தத்தில் நீடிக்கிறார்கள். சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன்கள் குவித்த ஷ்ரேயாஸ் ஐயருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்ட இஷான் கிஷன் மீண்டும் தேர்வாகவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. டி 20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபியில் அசத்திய அக்‌ஷர் படேலுக்கு கூடுதல் மதிப்புள்ள ஒப்பந்தம் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

அறிவிப்பு எப்போது?...

கடந்த வாரம் மகளிர் அணிக்கான தக்கவைப்பு பட்டியலை பி.சி.சி.ஐ. வெளியிட்டது. தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர், பி.சி.சி.ஐ. செயலாளர் தேவஜித் சைக்கியா ஆடவர் அணிக்கான ஒப்பந்தம் குறித்து சனிக்கிழமை குவஹாட்டியில் கலந்தாலோசிக்க இருந்தது தள்ளிவைக்கப்பட்டதாக தகவல் அளிக்கப்பட்டது. ஐ.பி.எல். முடிந்து 5 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்துடன் ஜூன்20 முதல் இந்தியா விளையாடவிருக்கிறது. கடைசியாக டெஸ்ட்டில் இங்கிலாந்தில் 2007இல் வென்றது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 days ago
View all comments

வாசகர் கருத்து