முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி விலக தயார்: மல்லிகார்ஜுன கார்கே ஆவேசம்

வியாழக்கிழமை, 3 ஏப்ரல் 2025      இந்தியா
Mallikarjuna-Karke 2023 02

புதுடெல்லி, வக்பு சொத்துகளை அபகரித்ததாக குற்றம்சாட்டிய அனுராக் தாகுர் அதனை நிரூபிக்க வேண்டும். அவ்வாறு அவர் நிரூபித்தால் நான் எனது பதவியை ராஜினாமா செய்துவிடுகிறேன் என்று மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.  

மாநிலங்களவை தினத்தை முன்னிட்டு, அவை நேற்று (வியாழக்கிழமை) தலைவர் ஜக்தீப் தன்கரின் உரையுடன் தொடங்கியது. பின்பு அவையில் எதிர்க்கட்சிகளின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பா.ஜ.க. எம்.பி. அனுராக் தாகுர் தன் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கு மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இது குறித்துப் பேசிய கார்கே, “பா.ஜ.க. எம்.பி. அனுராக் தாகுர் கூறிய கருத்துகள் மக்களவையில் திரும்பப் பெறப்பட்டாலும் அவை ஊடங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் பரப்பட்டிருக்கும். நானோ, எனது குடும்பத்தினரோ வக்பு சொத்துகளை அபகரித்ததாக குற்றம்சாட்டிய அனுராக் தாகுர் அதனை நிரூபிக்க வேண்டும். அவ்வாறு அவர் நிரூபித்தால் நான் எனது பதவியை ராஜினாமா செய்துவிடுகிறேன். அப்படி நிரூப்பிக்கத் தவறினால் அவர் ராஜினாமா செய்ய வேண்டும். இந்த அரசியல் அழுத்தங்களுக்கு எல்லாம் நான் அடிபணியமாட்டேன்.” என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய மாநிலங்களவைத் தலைவர் தன்கர், “கருத்துகளை நீக்குவது தீர்வாக இருக்காது. முந்தைய சந்தர்ப்பங்களிலும் மூத்த உறுப்பினர்கள் மீது இது போல குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டிருக்கின்றன. ஆனாலும் அவையில் மன்னிப்புக் கேட்பது உறுப்பினர்களின் கண்ணியத்தைக் காக்க உதவும்” என்றார்.

முன்னதாக, மக்களவையில் வக்பு திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடந்த போது பேசிய பா.ஜ.க. எம்.பி. அனுராக் தாக்குர், “வக்பு திருத்தச் சட்டம், காங்கிரஸின் சமாதான அரசியலை சவபெட்டிக்கு அனுப்பும் கடைசி ஆணியாகும். வக்பு வாரியம் முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காக சொத்துகளை நிர்வகிக்க வேண்டும். ஆனால் காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் நிலங்களை முறைகேடாக பயன்படுத்தி ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி அதனை தங்களின் வாக்கு வங்கிக்காக பயன்படுத்தின” என்று குற்றம்சாட்டியிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 days ago
View all comments

வாசகர் கருத்து