முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவல்லிக்கேணி அரசுப் பள்ளியில் ரூ.3.65 கோடியில் புதிய கட்டிடங்கள்: துணை முதல்வர் திறந்து வைத்தார்

வியாழக்கிழமை, 3 ஏப்ரல் 2025      தமிழகம்
Udayanidhi 2024-11-02

சென்னை, திருவல்லிக்கேணி அரசுப் பள்ளியில் ரூ.3.65 கோடியில் புதிய கட்டிடங்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

சென்னை திருவல்லிக்கேனி லேடிவில்லிங்டன் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் 3.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வெர்சுசா அறக்கட்டளையின்  பங்களிப்பில் ஒருங்கிணைந்த அறிவியல் ஆய்வகங்கள், நவீன சமையற் கூடம் மற்றும் உணவு அருந்தும் கூடம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன. அறிவியல் ஆய்வகங்கள் கொண்ட கட்டிடம் 6,600 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்களுடன் கட்டப்பட்டு இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆய்வகங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் இவ்வாய்வகத்தில் 24 இருக்கைகள் கொண்ட இரண்டு வகுப்பறைகளுடன் மொத்தம் 120 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இப்பள்ளியின் வளாகத்தில் 4,600 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள மற்றொரு தனிக்கட்டிடத்தில் சமையல் அறை மற்றும் 60 இருக்கைகள் கொண்ட உணவு அருந்தும் கூடம் ஆகியவை உள்ளன. மேலும்,  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பள்ளி கல்வித்துறையில் தட்டச்சர் பணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 5 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 days ago
View all comments

வாசகர் கருத்து