முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனவர்கள் சேட்டிலைட் போன் வாங்க ரூ. 80 லட்சம் மானியம்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

வியாழக்கிழமை, 3 ஏப்ரல் 2025      தமிழகம்
Anitha-Radhakrishnan-1

சென்னை, ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் படகுகளுக்கு 200 செயற்கைக்கோள் தொலைபேசிகள் வாங்கிட 80 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும் என்று பேரவையில் கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவித்தார். 

சட்டப்பேரவையில் கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர். அதற்கு பதிலளித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசி, புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.  மீனவ மகளிரின் பொருளாதார மேம்பாட்டுக்கு நுண்கடன் வழங்கிட ஏதுவாக 25 கோடி ரூபாய் மூலதனத்தில் ‘அலைகள்’ திட்டம் தமிழ்நாடு மாநிலத் தலைமை மீன்வளக் கூட்டுறவு இணையம் மூலம் செயல்படுத்தப்படும்

 காலநிலை மாற்றத்தினை எதிர்கொள்ளும் வகையில் 16 கடலோர மீனவ கிராமங்கள் 32 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி. கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் மற்றும் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகங்கள் 45 கோடி ரூபாய் செலவில் “பசுமை மீன்பிடி துறைமுகங்களாக” மேம்படுத்தப்படும். தரமான மீன் மற்றும் மீன் உணவு பொருட்களை நுகர்வோருக்கு நியாயமான விலையில் வழங்கிட, தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகத்தினால் “கயல்” திட்டம் தொடங்கப்படும்.

 மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் படகுகளுக்கு 200 செயற்கைக்கோள் தொலைபேசிகள் வாங்கிட 80 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும்.  மீன்கள் மற்றும் மீன் உணவுப் பொருட்களின் இருப்பு விவரம், விலை, மற்றும் சந்தை நிலவரம் ஆகிய தகவல்களை பயனீட்டாளர்கள் தெரிந்துகொள்ள ஏதுவாக "இ-மீன்" வலைதள சேவை 50 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்படும்.  நாகப்பட்டினம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய கடலோர மாவட்டங்களில் மீன்பிடிப்பினை மாற்று முறை ஊக்குவித்திட 200 நாட்டுப்படகு மீனவர்களுக்கு கணவாய் மீன்பிடி உபகரணங்கள் வாங்கிட 40 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.

 நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி கிராமத்தில் கடல் அரிப்பு தடுப்பு பணிகள் 18 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.  பாகு மீன் மற்றும் கொடுவா மீன் குஞ்சு உற்பத்தி மையங்கள் முறையே கிருஷ்ணகிரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். சென்னை, மாதவரம், மீன் ஊட்டச்சத்து மற்றும் உணவு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் மாணவ மாணவிகள் தங்கி பயிலுவதற்கு ஏதுவாக 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விடுதி உட்கட்டமைப்பு பணிகள் ஏற்படுத்தப்படும்.

சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த கடலோர மீனவ கிராமங்களில், உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள விரிவான தொழில்நுட்ப சாத்தியகூறுகளை ஆய்வு செய்திட ஏதுவாக 5 கோடி ரூபாய் சுழல் நிதி உருவாக்கப்படும், என்பது உள்ளிட்ட அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 days ago
View all comments

வாசகர் கருத்து