முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சொத்து விவரங்களை வெளியிட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒப்புதல்

வியாழக்கிழமை, 3 ஏப்ரல் 2025      இந்தியா
Supreme-Court 2023-04-06

 புது டில்லி, தங்களது சொத்து விவரங்களை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் வழங்கவும், அதனை உச்ச நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றவும் நீதிபதிகள் ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளனர்.

டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மாவின் அதிகாரப்பூர்வ இல்லத்தில், கடந்த மார்ச் மாதம் கணக்கில் வராத பல கோடி ரூபாய் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்ட நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் தங்களது சொத்து விவரங்களை உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் வழங்குவதற்கு ஒருமனதாக ஒப்புக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உச்ச நீதிமன்ற நீதிபதிகளால் ஒப்புதல் அளிக்கப்பட்டு வழங்கப்படும் சொத்து விவரங்கள், உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்றும், இதன் மூலம் நீதிபதிகளின் சொத்து விவரங்களை மக்கள் பார்வையிட முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டிலிருந்து கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மா, அவர் முன்பு பதவி வகித்த அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். உள் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 days ago
View all comments

வாசகர் கருத்து