முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேசுவரம் - தாம்பரம் இடையே பாம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில் கால அட்டவணை வெளியீடு

வியாழக்கிழமை, 3 ஏப்ரல் 2025      தமிழகம்
Pamban-Bridge

Source: provided

ராமேசுவரம்: பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 06 அன்று தொடங்கி வைக்க உள்ள ராமேசுவரம் முதல் தாம்பரம் வரையிலான தினசரி பாம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலின் கால அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

ராமநவமி நாளான நாளை மறுநாள் அன்று பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பதுடன், ராமேசுவரம் முதல் தாம்பரம் வரையிலான பாம்பன் எக்ஸ்பிரஸ் என்று பெயரிடப்பட்ட புதிய தினசரி ரயில் சேவையையும் தொடங்கி வைக்கின்றார். இந்த புதிய ரயில் சேவையின் கால அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. ரெயில் எண் 16104 தினசரி பிற்பகல் 03.35 மணிக்கு ராமேசுவரத்திலிருந்து புறப்பட்டு ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிபுலியூர், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக அதிகாலை 03.10 மணியளவில் தாம்பரம் சென்றடையும்.

அதுபோல, ரயில் எஸ் 16104 தினசரி மாலை 06.05 மணியளவில் தாம்பரத்திலிருந்து புறப்பட்டு செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைபூண்டி, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் வழியாக அதிகாலை 05.45 மணியளவில் ராமேசுவரம் வந்தடையும்.

புதிய பாம்பன் ரயில் பாலம் திறப்பு விழாவை முன்னிட்டு மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் கோரிக்கையான பாம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் ராமேசுவரத்திலிருந்து தாம்பரம் வரையிலும் இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கு பாம்பன் எக்ஸ்பிரஸ் என்று பெயரிட்டு விட்டு வரலாற்று சிறப்புமிக்க பாம்பன் ரயில் நிலையத்தில் நிற்காமல் செல்வது வேதனைக்குரிய விஷயம். ஆண்டிற்கு 55 லட்சத்திற்கும் அதிகமாக வருமானம் ஈட்டும் பாம்பன் ரயில் நிலையத்தில் பாம்பன் எக்ஸ்பிரஸ் நின்று செல்ல வேண்டும்” என ராமேசுவரம் தீவு ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், ராமேசுவரம் ஆலய வளாகத்தில் நடைபெற உள்ள பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை தாம்பரம், திருச்சி, திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய இடங்களிலிருந்து மண்டபத்துக்கு 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த விழாவில் 6 ஆயிரம் ரயில்வே ஊழியா்கள் பங்கேற்க உள்ளதாக ரயில்வே வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 days ago
View all comments

வாசகர் கருத்து