முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாய்க்கு பதிலாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மகள்

வியாழக்கிழமை, 3 ஏப்ரல் 2025      தமிழகம்
Exam (2)

Source: provided

நாகப்பட்டினம்: தாய்க்கு பதிலாக 10-ம் வகுப்பு தேர்வெழுதிய மகள் பிடிபட்டார்.

நாகை வெளிப்பாளையத்தில் உள்ள நடராஜன்-தமயந்தி பள்ளியில் நேற்றுமுன்தினம் 10-ம் வகுப்பு ஆங்கிலத் தேர்வு நடைபெற்றது. ஓர் அறையில் தேர்வெழுதிய மாணவி முகக்கவசம் அணிந்து இருந்ததால் சந்தேகமடைந்த தேர்வுக் கண்காணிப்பாளர், முகக்கவசத்தை அகற்றும்படி கூறினார். அப்போது, மாணவி வைத்திருந்த நுழைவுச் சீட்டில் இருந்த படமும், தேர்வுக் கண்காணிப்பாளர் வைத்திருந்த வருகைப் பதிவேட்டில் இருந்து படமும் வேறுபட்டிருந்தது தெரியவந்தது.

தகவலறிந்த பறக்கும் படை அலுவலர்கள் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தியதில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த செல்வாம்பிகை (23) என்பதும், நாகை அரசு மருத்துவமனை யில் சமையல் உதவியாளராகப் பணிபுரியும் தாய் சுகந்திக்கு (44) பதிலாக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத முற்பட்டதும் தெரியவந்தது. கடந்த 28-ம் தேதி நடைபெற்ற தமிழ்ப் பாட தேர்வையும் செல்வாம்பிகையே எழுதியது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவரை விசாரணைக்காக வெளிப்பாளையம் காவல் நிலையத்துக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். கல்வித் துறை அதிகாரிகளின் ஆலோசனைபெற்று, அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 days ago
View all comments

வாசகர் கருத்து