முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சொந்த மைதானத்தில் அதிக தோல்வி: பெங்களூரு அணி மோசமான சாதனை

வியாழக்கிழமை, 3 ஏப்ரல் 2025      விளையாட்டு
3-Ram-50

Source: provided

பெங்களூரு: சொந்த மைதானத்தில் அதிக தோல்வி அடைந்த அணி என்ற மோசமான சாதனையை பெங்களூரு அணி படைத்துள்ளது.

குஜராத்  அபாரம்...

ஐ.பி.எல். தொடரின் 14-வது லீக் போட்டி நேற்று முன்தினம் பெங்களூருவில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் பெங்களூரு- குஜராத் அணிகள் மோதின. இதில் முதலில் களமிறங்கிய பெங்களூரு 20 ஓவரில் 169 ரன்கள் எடுத்தனர். குஜராத்துக்கு அதிகபட்சமாக முகமது சிராஜ் 3, சாய் கிசோர் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அடுத்த விளையாடிய குஜராத் அணி 17.5 ஓவரில் 170 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. 

2வது பெரிய வெற்றி...

இதன் மூலம் விக்கெட்டுகள் அடிப்படையில் குஜராத் தங்களது இரண்டாவது பெரிய வெற்றியை பதிவு செய்து அசத்தியது. இதற்கு முன் 2023-ல் ராஜஸ்தானுக்கு எதிராக ஜெய்ப்பூரில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது அந்த அணியின் முதல் பெரிய வெற்றியாகும்.

மோசமான சாதனை... 

மறுபுறம் பேட்டிங்கில் சொதப்பிய பெங்களூரு இந்த வருடத்தில் முதல் தோல்வியை பதிவு செய்தது. இந்த தோல்வியையும் சேர்த்து தங்களது சொந்த மைதானமானத்தில் 44-வது தோல்வியை பெங்களூரு அணி பதிவு செய்துள்ளது. ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் அதிக தோல்விகளைப் பதிவு செய்த அணி என்ற மோசமான சாதனையை பெங்களூரு சமன் செய்துள்ளது. இதற்கு முன் டெல்லி அணியும் தங்களது சொந்த ஊரில் உள்ள டெல்லி மைதானத்தில் 44 தோல்விகளை பதிவு செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 days ago
View all comments

வாசகர் கருத்து