முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் அமைதி நிலவுவது எதிரிகளுக்கு பிடிக்கவில்லை: நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

சனிக்கிழமை, 26 ஏப்ரல் 2025      தமிழகம்
Rajini 2024-05-09

சென்னை, காஷ்மீரில் அமைதியான சூழல் நிலவுவது எதிரிகளுக்கு பிடிக்கவில்லை என்று நடிகர் ரஜினி கருத்து தெரிவித்துள்ளார்.

காஷ்மீரின் பஹல்காமில் பயங்ரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தை அடுத்து, பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது இந்தியா. மேலும், அரசியல் தலைவர்கள் மட்டுமன்றி இந்திய திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த தாக்குதலுக்கு தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள்.

தற்போது ‘ஜெயிலர் 2’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த்திடம், பஹல்காம் தாக்குதல் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ரஜினிகாந்த், “காஷ்மீரில் அமைதியான சூழல் நிலவுவது எதிரிகளுக்கு பிடிக்கவில்லை. அதை கெடுக்க வேண்டும் என்று செய்கிறார்கள்.

அதைச் செய்தவர்களுக்கும், அவர்கள் பின்னால் இருப்பவர்களுக்கும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கடுமையான தண்டனையை கொடுக்க வேண்டும். இதே மாதிரி மீண்டும் செய்ய வேண்டும் என கனவிலும் அவர்கள் நினைக்கக் கூடாது. மத்திய அரசு கூடிய விரைவில் அதை செய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து