முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

10+ குறிப்புகள் - உடல் வலி,குடைச்சல் தீர, உடல் எரிச்சல், அரிப்பு, ஆசனவாய், நுரையீரல் பலமாக

siddha-5

  • உடல்அரிப்புகுணமாக; வன்னி மரத்தின் இலையை பசும்பால் விட்டு அரைத்து தினசரி ஒரு அவுன்ஸ் சாப்பிட்டு வந்தால் தீரும்.
  • குத்தல் குடைச்சல் நீங்க ;-- தை வேளை சமூலத்தை இடித்து பிழிந்து சக்கையை தலையில் கட்டி வைக்கவும்.
  • உடல் வலி தீர ;--வாத நாராயணன் இலையை போட்டு கொதிக்க வைத்து நீரில் குளிக்கலாம்.
  • உடல் குளிர்ச்சி பெற ;-- உசிலை இலையை சீயக்காய்க்குப் பதிலாக பயன்படுத்தலாம்.
  • குடைச்சல் வலி ;--ஆடாதொடைவேர் மற்றும் கண்டங்கத்திரி வேரை பொடி செய்து தேனில் சாப்பிடலாம்.
  • உடம்பு எரிச்சல் நமைச்சல் குணமாக;--கீழா நெல்லி இலையையும் அம்மன் பச்சரிசி இலையையும் சம அளவு அரைத்து தயிரில் சாப்பிடலாம்.
  • உடல் எரிச்சல் சரியாக ;-- ஆவாரம் வேர்,இலை,பட்டை ,பூ,காய் அனைத்தையும் காய வைத்து பொடியாக்கி சாப்பிடவும்.
  • உடல் எரிச்சல் குணமாக ;-- கீழாநெல்லி செடியை சுத்தம் செய்து இளநீர் விட்டு அரைத்து உடல் மீது பூசி குளித்து வரலாம்.
  • உடல் தளர்ச்சி நீங்க ;-- கணு நீக்கிய அருகம்புல்லை அரைத்து வெண்ணை கலந்து 48 நாட்கள் சாப்பிடலாம்.
  • உடல் வலி குணமாக;-- வில்வ இலை மற்றும் அருகம்புல்லையும் இடித்து சாறு எடுத்து காலை,மாலை ஒரு அவுன்ஸ் சாப்பிட்டு வர உடல் வலி தீரும்.
  • அலுப்பு தீர ;-- மிளகாய்யை நெயில்  வறுத்து தூள் செய்து வெல்லம் நெய் சேர்த்து லேகியம் போல் கிளறி 5 கிராம் அளவு சாப்பிட்டு வரலாம்.
  • உடல் வெப்பம் தனித்து குளிர்ச்சி உண்டாக ;-- மாதுளம் பழத்தை பிழிந்து கற்கண்டு சேர்த்து பருகி வரலாம்.
  • உடல் அசதி தீர ;-- முருங்கை ஈர்க்கு கஷாயம் சாப்பிடவும் .
  • ஆசனவாய்,நுரையீரல் பலமாக ;-- ரோஜாப்பூ தேன்கற்கண்டு தேன் கலந்து வெயிலில் வைத்து ஒரு கிராம் அளவு சாப்பிடவும்.
  • தேககாந்தல்  தீர ;--முசுமுசுக்கைச் சாறுடன் சம அளவு நல்லெண்ணைய் கலந்து காய்ச்சி வாரம் ஒரு முறை தலை முழுக குணமாகும்.
  • வெப்ப நோய் தீர ;-- பாதாளமுலி பழ சாறில் செய்த மணப்பாகு சாப்பிட்டு வர வெப்ப நோய் தீரும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்