முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிக விலைக்கு பீர் விற்றால் கடும் நடவடிக்கை

சனிக்கிழமை, 16 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.17 - டாஸ்மாக் கடைகளில் பீர் அதிக விலைக்கு விற்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் பீர் நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் வந்தது. குளிர்ச்சியான பீர் வேண்டுமானால் கூடுதலாக ரூ.10, ரூ.20 கொடுக்க வேண்டியுள்ளது. இதுதவிர பீர் விலை ரூ.65 என்றால் ரூ.70 ஆகவும் ரூ.75 என்றால் ரூ.80 ஆகவும் கூடுதலாக வசூலித்தனர்.

இதனால் டாஸ்மாக் நிறுவனம் பீர் விலையை ஒரே சீரமைத்தது. ரவுண்ட் தொகையாக நிர்ணயம் செய்து அறிவித்தது. இதன்படி ரூ.70, ரூ.80, ரூ.90, ரூ.100 என்ற விலையில் பீர் வகைகள் தற்போது  விற்கப்படுகின்றன. 

பீர் விலையை ரவுண்டாக சீர்படுத்திய பிறகும் ஊழியர்கள் கூடுதலாக வசூலிக்கிறார்களா என்பதை கண்காணிக்க சிறப்புப் படை அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் அதிகாரிகள் தலைமையில் சிறப்புப்படை அமைக்கப்பட்டு நேற்றுமுதல் தீவிரமாக கண்காணிக்கிறார்கள்.

அதிகபட்ச விலைக்கு பீர் விற்கப்படுகிறதா? அதைவிட கூடுதலாக வசூலிக்கிறார்களா என்பதை டாஸ்மாக் அதிகாரிகள் ரகசியமாக கண்காணிக்கிறார்கள்.

கூடுதல் விலைக்கு விற்றதாக பிடிபடும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் மது பிரியர்கள் சரியான தொகை கொடுத்து பீர் பாட்டில்களை வாங்க வேண்டும் என்பதற்காக டாஸ்மாக் கடைக்கு முன் பகுதியில் புதிய விலைப்பட்டியல் அடங்கிய போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் 19 கம்பெனிகளின் பீர் விலைகள் குடி மகன்கள் பார்வைக்கு  வைக்கப்பட்டுள்ளன. மேலும் அரசு நிர்ணயித்துள்ள பீர் விலையைவிட அதிக விலைக்கு விற்றால் புகார் தெரிவிக்க வேண்டிய டெலிபோன் எண்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அந்த எண்களுக்கு தொடர்பு கொண்டு எந்த கடையில் அதிக விலைக்கு பீர் விற்கப்படுகிறது என்று புகார் கூறினால் அந்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் அதிகாரி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்