முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சங்மாவை ஆதரிக்க ஜெயலலிதா மீண்டும் வேண்டுகோள்

வியாழக்கிழமை, 21 ஜூன் 2012      அரசியல்
Image Unavailable

சென்னை, ஜூன்.22 - ​ ஜனாதிபதி தேர்தலில் பி.ஏ.சங்மாவுக்கு  பல கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன, மம்தாவும் ஆதரிப்பார் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். முதல்​அமைச்சர் ஜெயலலிதா இன்று காலையில் கொடநாடு செல்லும் முன்பு வீட்டு வாசலில் நிருபர்கள் அவரை பேட்டி கண்டனர். அதன் விவரம் வருமாறு:​

கேள்வி:​ ஜனாதிபதி தேர்தலில் பி.ஏ.சங்மாவை ஆதரிப்பதாக ஏற்கனவே கூறி இருந்தீர்கள். இப்போது உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில்: கடந்த 1 மாதத்துக்கு முன்பே ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் பி.ஏ.சங்மாவை அ.தி.மு.க. ஆதரிப்பதாக கூறி அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று பல்வேறு கட்சித் தலைவர்களிடம் பேசி ஆதரவு திரட்டி வந்தேன். என்னிடம் பல்வேறு கட்சி தலைவர்கள் பேசி வருகிறார்கள். எனவே எனது முடிவில் எந்த மாற்றமும் இல்லை. எனது வேண்டுகோளை ஏற்று பி.ஏ.சங்மாவுக்கு பல்வேறு  கட்சிகள் ஆதரவு அளிக்க முன்வந்துள்ளன, அதை வரவேற்கிறேன். எல்லா கட்சிகளும் அவரை ஆதரிக்க வேண்டும்.

கே:அப்துல் கலாமை ஆதரிக்கப் போவதாக மம்தாபானர்ஜி கூறினாரே? அவர் உங்களுடன் பேசினாரா?

ப:மம்தா பானர்ஜி அப்துல் கலாமை ஆதரிக்க வேண்டும் என்று என்னிடம் முதலில் தொலைபேசியில் பேசினார். நான் எங்கள் கட்சியின் நிலைப்பாட்டை அவரிடம் தெரிவித்தேன். இப்போது அப்துல்கலாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடாததால் இந்த கேள்வியே எழவில்லை. மம்தாபானர்ஜியும் பி.ஏ.சங்மாவை ஆதரிப்பார் என நம்புகிறேன்.

கே:பி.ஏ.சங்மா வெற்றி பெற போதிய ஓட்டு இல்லை என்று தெரிகிறதே?

ப:பொறுத்திருந்து பாருங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்