முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா மீண்டும் கடிதம்

வியாழக்கிழமை, 5 ஜூலை 2012      அரசியல்
Image Unavailable

சென்னை, ஜூலை. - 5 - தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து நடத்தும் தாக்குதல்களை உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும் என்றும், இப்பிரச்சனையை விரைந்து முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன்சிங்கை மீண்டும் வலியுறுத்தி உள்ளார். பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று எழுதியுள்ள கடிதம் வருமாறு:- தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதல்கள் மற்றும் சித்தரவதைகள் போன்ற சம்பவங்களை நிறுத்துவதற்கு நீங்கள் தலையிட வேண்டும் என்று கடந்த ஜூன்.28-ம் தேதி அன்று நான் தங்களுக்கு எழுதிய கடிதத்தை மீண்டும் நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இதேபோன்ற சம்பவம் மீண்டும் கடந்த 2-ம் தேதியன்று நடந்துள்ளது. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய 2 தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த ஜூன் 29-ம் தேதியன்று ராமேஸ்வரம் பகுதியில் உள்ள முகுந்தராயர் சத்திரம் ஊரில் இருந்து 3 மீனவர்கள் ஒரு படகில் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். ராமேஸ்வரம் கடலில் கல்பிட்டி தீவு அருகே அவர்களின் படகுகளையும், மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து உள்ளனர். அவர்கள் மீது புகையிலை பொருட்களை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு மேல் விசாரணைக்காக கொழும்பு அருகே உள்ள பகுதிக்கு அழைத்துச்செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதேபோல மற்றொரு சம்பவம் கச்சத்தீவு பகுதியில் கடலில் மீன் பிடித்த 5 மீனவர்கள் வேறு மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். அவர்கள் சென்ற எந்திர படகும் கைப்பற்றப்பட்டுள்ளது. அவர்கள் காணாமல் போனவுடன் 5 மீனவர்கள் ஒரு படகில் சென்று தேடியுள்ளனர். அவர்களையும் சேர்த்து மொத்தம் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து அவர்களின் படகுகளையும் கைப்பற்றி அழைத்துச்சென்று இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர் என்ற செய்தி தெரியவந்துள்ளது. ஏற்கனவே 5 ராமேஸ்வரம் மீனவர்கள் மீது பொய்யான புகார்கள் கூறப்பட்டு கைது செய்து சென்ற ஆண்டு நவம்பர் 29-ம் தேதி முதல் அவர்கள் இலங்கை சிறையில் வாடி வருகின்றனர் என்பதும் தங்களுக்கு தெரியும் என்று நம்புகிறேன். இப்போது 13 மீனவர்களும் அவர்களின்  3 படகுகளும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதானது, இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது எவ்வளவு மோசமான அணுகுமுறையை கடைபிடிக்கின்றனர் என்பதை உறுதி செய்கிறது. இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது என்பது தொடர்ந்து நடைபெறும் நிகழ்வாகிறது. பாக்ஜலசந்தியில் தமிழக மீனவர்களின் மீன் பிடிக்கும் வாழ்வாதார உரிமையை இலங்கை கடற்படையினர் வேண்டும் என்றே பறிக்கின்றனர். எனவே இந்த விஷயத்தில் தாங்கள் விரைந்து தலையிட்டு இந்த பிரச்சனையை இலங்கை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, உடனடியாக இலங்கை சிறையில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதில் உங்களின் விரைவான நடவடிக்கையை எதிர்பார்க்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 weeks ago