முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சித் துறையில் வாரிசுகளுக்கு வேலை: அமைச்சர்

புதன்கிழமை, 27 மார்ச் 2013      அரசியல்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.28 - உள்ளாட்சித் துறையில் பணியில் இருக்கும்போது இறந்தவர்களின் பிள்ளைகளுக்கு தகுதிக்கேற்ப வேலை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் விவாதத்தின்போது செ.கு.தமிழரசன் கேள்வி குறித்த விவரம் வருமாறு:​

செ.கு.தமிழரசன் (குடியரசு கட்சி): உள்ளாட்சித்துறையில் பணியில் இறந்தவர்களின் பிள்ளைகளுக்கு அதே வேலை வழங்கப்படும் என்று அரசாணை உள்ளதாக கூறப்படுகிறது. அப்படி இருந்தால் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்ப்பவரின் பிள்ளைகளுக்கு கல்வியறிவுக்குத் தகுந்தாற்போல் பணி வழங்க வேண்டும். எனவே இதுபோல் உத்தரவு வேறு துறைகளுக்கு போகாமல் இதை சரி செய்ய வேண்டும்.

அமைச்சர் கே.பி.முனுசாமி: உள்ளாட்சித்துறையில் பணியில் இருக்கும்போது இறந்தவர்களின் பிள்ளைகளுக்கு அவர்களுடைய கல்வித் தகுதிக்கேற்றவாறு எழுத்தர் பணி போன்றவை வழங்கப்படும் என்றுதான் அரசு ஆணை வழங்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு அமைச்சர் கே.பி.முனுசாமி கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்