முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரை இறுதிச்சுற்றில் பெங்களூர் - நியூசெளத் வேல்ஸ்

வெள்ளிக்கிழமை, 7 அக்டோபர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

பெங்களூர், அக். 7 - சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்ச ர்ஸ் அணியும், நியூசெளத் வேல்ஸ் அணியும் ஒரு அரை இறுதியில் மோதுகின்றன. மற்றொரு அரை இறுதியில், மும்பை இந்தியன்ஸ் அணியும், சோமர் செட் அணியும் மோத உள்ளன. சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 19 -ம் தேதி தொட ங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதில் 10  அணிகள் பங்கேற்றன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டன. 

ஏ பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், நியூசெளத் வேல்ஸ் (ஆஸ்திரேலியா), டிரினிடாட் அன்ட் டுபாக்கோ (வெஸ்ட் இண்டீஸ்), கேப் கோப்ராஸ் (தென் ஆப்பிரிக்கா), ஆகிய அணிகள் பங்கேற்றன. 

பி பிரிவில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர் ஸ், சோமர்செட் (இங்கிலாந்து), வாரியர்ஸ் (தென் ஆப்பிரிக்கா) செளத் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் பங்கு கொண்டன. 

இதில் லீக் ஆட்டம் 5 -ம் தேதியுடன் நிறைவடைந்தது. ஏ பிரிவில் நியூ செளத் வேல்ஸ் 6 புள்ளிகள் பெற்று முதலிடத்தையும், மும்பை இந்தி யன்ஸ் 5 புள்ளிகளுடன் 2 -வது இடத்தையும் பிடித்து அரை இறுதிக்கு தகுதி பெற்றன. 

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏ பிரிவில் கடை சி இடத்தைப் பிடித்து வெளியேறியது.  தவிர, குறைவான புள்ளிகள் பெற்ற டிரினிடாட்  மற்றும் கோப்ரா ஸ் அணிகளும் வெளியேற்றப்பட்டன. 

பி பிரிவில், சோமர்செட் 5 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது. பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா, வாரியர்ஸ் அணிகள் தலா 4 புள்ளிகள் பெற்றன. ரன் ரேட் அடிப்படையில், பெங்களூர் 2 -வது இடத்தை பிடித்து அரை இறுதிக்கு முன்னேறியது. அந்த அணியி ன் ரன் ரேட் பிளஸ் 0.325 ஆகும். 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ரன் ரேட் பிளஸ் 0.306 ஆகும். வாரியர்ஸ் ரன் ரேட் பிளஸ் 0.246 ஆகும். இதனால் கொல்கத்தா, வாரி யர்ஸ் மற்றும் செளத் ஆஸ்திரேலிய அணிகள் வெளியேற்றப்பட்டன. 

அரை இறுதி ஆட்டங்கள் பெங்களூர் மற்றும் சென்னையில் நடக்கிற து. பெங்களூரில் இன்று நடக்க இருக்கும் முதல் அரை இறுதியில் பெ ங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், நியூசெளத் வேல்ஸ் அணிகள் மோத இருக்கின்றன.  

2 -வது அரை இறுதி ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 8 -ம் தேதி நடக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சோமர்செட் அணிகள் மோதுகின்றன. இறுதிப் போட்டி 9 -ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்