முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலிய ஓபன்டென்னிஸ்: ரபேல்நடால் காலிறுதிக்குதகுதி

திங்கட்கிழமை, 23 ஜனவரி 2012      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன், ஜன.- 23 - ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதி போட்டிக்கு ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் தகுதி பெற்றுள்ளார். இந்த ஆண்டின் துவக்க கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி  நடைபெற்று வருகிறது. உலகின் முன்னணி வீரர்கள் பலரும் பட்டத்தை குறிவைத்து களமிறங்கி உள்ளனர். முன்னணி வீரர்கள் அனைவரும் வெற்றியை தக்கவைத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஸ்பெயின் நாட்டவரும் உலகின் 2 ம் நிலை வீரருமான ரபேல் நடால் 4-வது சுற்று போட்டியில் உலகின் 18 ம் நிலை வீரரான லோபசை எதிர்கொண்டார். இதில் 6 - 4, 6 - 4, 6 - 2 என்ற நேர்செட்டுகளில் எளிதாக வென்று காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். நடால் கடந்த 2009 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.  நடால் காலிறுதிப் போட்டியில் செக்.குடியரசின் தாமஸ் பெர்டிச்  அல்லது ஸ்பெயினின் அல்மாகுரோவை சந்திப்பார். ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மகேஷ் பூபதி - ரோகண் போபண்ணா ஜோடி 3 வது சுற்றில் பிரான்சின் பர்கட்- ஹென்றி ஜோடியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. முதல் செட்டில் கடுமையாக போராடிய இந்திய ஜோடி அடுத்த செட்டில் எதிர்ப்பு எதையும் காட்டாமல் பணிந்தது. பெண்கள் பிரிவில் உலகின் 3 ம் நிலை வீராங்கனையான பெலாரசின் அசெரன்கா 6 - 2, 6 - 2 என்ற நேர்செட்களில் செக். குடியரசின் பொன்சோவாவை எளிதில் வென்று காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். காலிறுதியில் அவர் போலந்தைச் சேர்ந்த உலகின் 8 ம் நிலை வீராங்கனையான ரட்வான்ஸ்காவை எதிர்கொள்ள இருக்கிறார். ரட்வான்ஸ்கா 4 வது சுற்றில் ஜெர்மனியின் ஜுலியாவை 6 - 1, 6 - 1 என்ற நேர்செட்டில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதிபெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்