முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடிக்கு வாய்ப்பு

சனிக்கிழமை, 11 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, பிப்.11 - அடுத்த மக்களவை தேர்தலில் பா.ஜ.க சார்பில் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படும் வாய்ப்பு இருப்பவர்களில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் ஒருவர் என்று அக்கட்சியின் தலைவர் நிதின் கட்காரி கூறியுள்ளார். நரேந்திர மோடிக்கு இந்தியாவின் பிரதமராகும் முழு தகுதியும் திறனும் இருக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2012 ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தில் மோடியை குற்றஞ்சாட்டுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று ஆமதாபாத் நீதிமன்றத்தில் இது குறித்து விசாரித்த சிறப்பு புலனாய்வு குழு அறிக்கை தாக்கல் செய்தது. 

இதன் பிறகு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் நிதின் கட்காரி இந்த கருத்தை தெரிவித்தார். 2014 தேர்தலில் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராகும் வாய்ப்பு மோடிக்கு இருக்கிறதா. அவர் ஏன் உத்தரபிரதேசத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை என்பன போன்ற கேள்விகளுக்கு கட்காரி பதில் அளித்தார். 

பிரதமராகும் தகுதியும், திறமையும் கொண்ட பல தலைவர்கள் பா.ஜ.கவில் இருக்கிறார்கள். அவர்களில் நரேந்திர மோடியும் ஒருவர். 2014 ம் ஆண்டு பொதுத் தேர்தலில் யார் பிரதமர் வேட்பாளர் என்பதை கட்சி முடிவு செய்யும். 

உத்தரபிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்று மோடியிடம் கட்சி சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. எந்த நாளில் பிரச்சாரம் செய்யலாம் என்று அவர்தான் முடிவெடுக்க வேண்டும். உத்தரபிரதேசத்தில் கட்சி விவகாரங்களை கவனித்து கொள்வதற்கு சஞ்சய் ஜோஷியை நியமித்ததால் திருப்தியடைந்து அங்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய மோடி வரவில்லையா என்று கேட்கப்பட்டது. 

அதற்கு நேரடியாக பதிலளிக்காத கட்காரி, நரேந்திர மோடி கட்சியின் உயர் தலைவர், பிரச்சாரம் செய்வதற்கான தேதிகளை அவரிடமிருந்து எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம். தேதி கொடுத்தால் அதற்கேற்றபடி நடவடிக்கை எடுப்போம் என்றார். 

பா.ஜ.க ஜனநாயக கட்சி என்றால் உத்தரபிரதேசத்தில் பிரச்சாரம் செய்யுமாறு மோடியை நிர்பந்திக்கலாமே என்று கேட்ட போது இது சரியான கேள்விதான். ஆனால் தவறான நபரிடம் கேட்கிறீர்கள் என்றார் கட்காரி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 days ago