முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியைவீழ்த்தியது

சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2012      விளையாட்டு
Image Unavailable

 

சிட்னி, பிப். - 18 - ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரு ம் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொ டர் போட்டியில் சிட்னியில் நடந்த லீக் ஆட்டத்தில் இலங்கை அணி 8 விக்கெ ட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது. இந்த வெற்றி இலங்கை அணிக்கு இந்த த் தொடரில் கிடைத்த முதலாவது வெ ற்றியாகும். இதற்கு முன்பு அந்த அணி 3 லீக்கில் ஆடியது. இதில் இரண்டில் தோல்வியும், ஒரு ஆட்டத்தில் டிராவும் செய்து இருந்தது. இந்தப் போட்டியில் இலங்கை பெளல ர்கள் நன்கு பந்து வீசி ஆஸ்திரேலிய அணியின் ரன் குவிப்பை முதலில் கட்டுப் படுத்தினர். இதுவே அந்த அணியி ன் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இலங்கை அணி தரப்பில், பெரீரா மற் றும் மகரூப் இருவரும் சிறப்பாக பந்து வீசி தலா 2 விக்கெட் எடுத்தனர். மலிங் கா, ஹெராத், மேத்யூஸ் ஆகியோர் அவர்களுக்கு பக்கபலமாக பந்து வீசினர். பின்பு பேட்டிங்கின் போது, கேப்டன் ஜெயவர்த்தனே, தில்ஷான் மற்றும் கீப் பர் சங்கக்கரா ஆகியோர் நன்கு ஆடி அணியை வெற்றி பெற வைத்தனர். இந்தப் போட்டி துவங்குவதற்கு முன்பாக மழை பெய்ததால் இரு அணிகளுக்கும் மொத்த ஓவர்கள் டக்வொர்த் லீவிஸ் முறையில் 41 ஆகக் குறைக்கப் பட்டது. ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான லீக் போ   ட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று பகலிரவு ஆட்டமாக நடந்தது. இதில் டாசில் வெற்றி பெற்ற ஆஸி. அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.  முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி இந்தப் போட்டியி  ல் ரன் எடுக்க திணறியது. இறுதியில் அந்த அணி 40.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 158 ரன்னில் சுருண்டது.  ஆஸ்திரேலிய அணி சார்பில், 6 - வது வீரராக இறங்கிய டேவிட் ஹஸ்சே அதிகபட்சமாக 64 பந்தில் 58 ரன்னை எடுத்தார். இதில் 6 பவுண்டரி அடக்கம். இறுதியில் அவர் பெரீரா வீசிய பந்தில் திரிமண்னேவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.  மற்ற வீரர்கள் யாரும் கால் சதத்தை தாண்டவில்லை. வார்னர் 13 ரன்னிலு ம், வாடே 15 ரன்னிலும், கேப்டன் பா ண்டிங் 2 ரன்னிலும், பாரெஸ்ட் 16 ரன்

னிலும், மைக் ஹஸ்சே 13 ரன்னிலும், கிறிஸ்டியன் 6 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இலங்கை அணி தரப்பில் பெரீரா அபா ரமாக பந்து வீசி 29 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். மகரூப் 18 ரன்

னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, மலிங்கா மற்றும் மேத்யூஸ், ஹெராத் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். 

இலங்கை அணி 41 ஓவரில் 152 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற எளிய இலக்கை ஆஸி. அணி வைத்தது. பின்பு களம் இறங்கிய அந்த அணி 24.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்

னை எடுத்தது. 

இதனால் இலங்கை அணி இந்தப் போ

ட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி

யின் மூலம் இலங்கை அணிக்கு 5 புள்ளி

கள் கிடைத்துள்ளது. 

இலங்கை அணி தரப்பில் துவக்க வீரரா  

க இறங்கிய ஜெயவர்த்தனே அதிகபட்சமாக 67 பந்தில் 61 ரன்னை எடுத்தார். தவிர தில்ஷான் 41 பந்தில் 45 ரன்னையும், சங்கக்கரா 29 பந்தில் 30 ரன்னையும் எடுத்தனர். 

ஆஸ்திரேலிய அணி சார்பில், முன்ன

ணி வேகப் பந்து வீச்சாளரான பிரட்லீ 42 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடு

த்தார். மெக்கே 23 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். இந்தப் போட்டி

யின் ஆட்டநாயகனாக பெரீரா தேர்வு செய்யப்பட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 weeks ago