எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில், தொல்லியல் துறை சார்பில் 13 கோடியே 27 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் செலவில் புனரமைப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட மதுரை மாவட்டத்திலுள்ள திருமலை நாயக்கர் அரண்மனை, சிவகங்கை மாவட்டத்திலுள்ள மருதுபாண்டியர் கோட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள தியாகதுருகம் மலைக்கோட்டை, கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள உதயகிரிக் கோட்டை, திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சின்னையன்குளம், பூண்டி அருகர்கோயில், தடாகபுரீஸ்வரர் கோயில் மற்றும் கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயில் ஆகிய 8 பாதுகாக்கப்பட்ட வரலாற்றுச் சின்னங்களை திறந்து வைத்தார்.
ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவித் திட்டத்தின் கீழ், சுற்றுலாத் துறையின் மூலம் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 12 நினைவுச் சின்னங்கள் புனரமைப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ள தெரிவு செய்யப்பட்டு, முதற்கட்டமாக தூத்துக்குடி மாவட்டம், கட்டபொம்மன் கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம், மனோரா நினைவுச் சின்னம், நாகப்பட்டினம் மாவட்டம், டச்சுக் கல்லறை ஆகிய 3 நினைவுச் சின்னங்கள் புனரமைப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு தமிழக முதல்வரால் கடந்த 5.10.2020 அன்று திறந்து வைக்கப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக, மதுரை மாவட்டம், திருமலை நாயக்கர் அரண்மனையில் 3 கோடியே 60 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அரண்மனையின் மேற்கூரையில் பழைய தளஓடுகள் மாற்றப்பட்டு சுண்ணாம்பு கலவையில் புதிய தளஓடுகள் பாவுதல், தூண்களில் சிதிலமடைந்த பகுதிகள் சீர் செய்யப்பட்டு, மேல் பூச்சு கொடுத்தல், திறந்தவெளிப் பகுதியில் புறா தடுப்பு வலை அமைத்தல், பழுதான மர ஜன்னல்கள் மற்றும் கதவுகளை சீர் செய்தல், அரண்மனையைச் சுற்றிலும் மழைநீர் வடிகால் வசதியை மேம்பாடு செய்தல், அரண்மனையில் குவி மாடங்கள் மற்றும் அரண்மனைச் சுவர்ப் பகுதிகளில் வண்ணப்பூச்சு பூசுதல் போன்ற பணிகள்,
சிவகங்கை மாவட்டம், மருதுபாண்டியர் கோட்டையில் 60 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சிதிலமடைந்த கோட்டைச் சுவர் மற்றும் கூரை ஆகியவை சீரமைக்கப்பட்டு, பாதுகாவலர் அறை, மின்விளக்குகள், கோட்டையைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட பகுதியில் கற்கட்டுமானம் அமைக்கப்பட்டு, அதன்மேல் இரும்பிலான பாதுகாப்பு கிரில் அமைத்தல் போன்ற பணிகள்,
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் மலைக்கோட்டையில் 2 கோடியே 41 லட்சம் ரூபாய் செலவில் கோட்டை அமைந்துள்ள மலையைச் சுற்றிலும் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதியில் கற்கட்டுமானம் அமைக்கப்பட்டு, அதன்மேல் இரும்பிலான பாதுகாப்பு கிரில் அமைத்து, பாதுகாவலர் அறை, கழிப்பறை வசதி, மின்விளக்குகள், கோட்டைக்கு செல்லும் வழிப்பாதையில் தளம் அமைத்தல் போன்ற பணிகள்,
கன்னியாகுமரி மாவட்டம், உதயகிரி கோட்டையில் 2 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பழுதடைந்த கோட்டைச் சுவர்ப் பகுதிகள் சீர் செய்யப்பட்டும், கோட்டைச் சுவரில் மேல்பகுதி வண்ணப்பூச்சு பூசுதல், இங்குள்ள டிலெனாய் கல்லறை பகுதி மேம்பாடு பணிகள் மற்றும் செல்லும் வழிப்பாதையில் கற்தளம் அமைத்தல் போன்ற பணிகள்,
திருவண்ணாமலை மாவட்டம் சின்னையன்குளத்தில் 15 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பாதுகாவலர் அறை, கழிப்பறை மேம்பாடு வசதி, மின்விளக்குகள் போன்ற பணிகள், திருவண்ணாமலை மாவட்டம், பூண்டி அருகர் கோயிலில் 33 லட்சத்து 61 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பாதுகாவலர் அறை, மின்விளக்குகள், கோயிலைச் சுற்றிலும் கற்தளம் அமைத்தல், வழிப்பாதையில் அணுகுசாலை அமைத்தல் போன்ற பணிகள், திருவண்ணாமலை மாவட்டம், தடாகபுரீஸ்வரர் கோயிலில் ஒரு கோடியே 85 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பாதுகாவலர் அறை, பார்வையாளர்களுக்கு தங்கும் அறை மற்றும் கழிப்பறை வசதி, மின்விளக்குகள், கோயிலைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட பகுதியில் கற்கட்டுமானம் அமைக்கப்பட்டு, அதன்மேல் இரும்பிலான பாதுகாப்பு கிரில் அமைத்தல் போன்ற பணிகள்,
திருவண்ணாமலை மாவட்டம், கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயிலில் ஒரு கோடியே 99 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பாதுகாவலர் அறை, பார்வையாளர்களுக்கு தங்கும் அறை மற்றும் கழிப்பறை வசதி, மின்விளக்குகள், கோயில் வளாகத்தில் தரைத்தளம் அமைத்தல், கோயிலைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட பகுதியில் கற்கட்டுமானம் அமைக்கப்பட்டு, அதன்மேல் இரும்பிலான பாதுகாப்பு கிரில் அமைத்தல் போன்ற பணிகள் என மொத்தம் 13 கோடியே 27 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் செலவில் புனரமைப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட 8 பாதுகாக்கப்பட்ட வரலாற்றுச் சின்னங்களை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.
மேலும், தொல்லியல் துறையில் தொல்லியல் அலுவலர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தெரிவு செய்யப்பட்ட 17 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக தமிழக முதல்வர் 7 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் நேரடி வாரிசான வீமராஜா என்ற ஜெகவீரபாண்டிய சுப்பிரமணிய கட்டபொம்மு துரை என்பவரின் மகன் கணபதி ராஜாவுக்கு, மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையிலும் மற்றும் முருகதேவிக்கு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன்கோட்டை நினைவுச் சின்னத்திலும், சிறப்பு நேர்வாக கருணை அடிப்படையில் காவலர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளை தமிழக முதல்வர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ, ஆர்.பி.உதயகுமார், பாண்டியராஜன், தலைமைச் செயலாளர் சண்முகம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் விக்ரம் கபூர், தொல்லியல் துறை ஆணையர் / முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-01-2025.
21 Jan 2025 -
பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கு: ஞானசேகரனிடம் விடிய, விடிய சிறப்புக்குழுவினர் விசாரணை
21 Jan 2025சென்னை: மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக ஞானசேகரனிடம் விடிய விடிய சிறப்புக்குழுவினர் விசாரணை நடத்தினர்.
-
தங்கம் விலையில் மாற்றமில்லை
21 Jan 2025சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டது.
-
2021-ல் நாடாளுமன்ற தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு பொது மன்னிப்பு : அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
21 Jan 2025வாஷிங்டன் : 2021ம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப் பட்ட சம்பவத்தில் வழக்கை எதிர்கொண்டுள்ளவர்களுக்கு அதிபர் டிரம்ப் பொது மன்னிப்பு வழங்கியுள்ளார் .
-
வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்க கோரிய மனு தள்ளுபடி ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
21 Jan 2025மதுரை: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
-
நிலச்சரிவு - வெள்ளம்: இந்தோனேசியாவில் 17 பேர் பலி
21 Jan 2025ஜகார்த்தா: இந்தோனேசியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட நிலச்சரிவு, திடீர் வெள்ளத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர்.
-
ஜகபர் அலி குடும்பத்திற்கு இழப்பீடு: ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
21 Jan 2025சென்னை: கனிம வளக் கொள்ளையைத் தடுக்கப் போராடி உயிரிழந்த ஜகபர் அலி குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
தஞ்சை அருகே சிறுமி பாலியல் பலாத்காரம்: 2 வாலிபர்கள் கைது
21 Jan 2025தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே சவுக்கு தோப்பில் வைத்து 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
-
மேலும் ஒருவரின் மனு தள்ளுபடி: ஈரோடு கிழக்கில் 46 பேர் போட்டி
21 Jan 2025ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த பெங்களூருவைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் பத்மாவதியின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்ட தையடுத்து,
-
சயிப் அலிகானை தாக்கியது எப்படி? நடித்துக்காட்டிய குற்றவாளி ஷரிபுல்
21 Jan 2025மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை தாக்கியது எப்படி என்று குற்றவாளி ஷரிபுல் நடித்து காட்டினார்.
-
அமெரிக்க அரசின் செயல் திறன் துறையில் இருந்து விவேக் ராமசாமி திடீர் விலகல் - பின்னணி என்ன?
21 Jan 2025வாஷிங்டன் : அமெரிக்க அரசின் செயல் திறனை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட துறையில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள விவேக் ராமசாமி, இப்பணியை எலான் மஸ்க் குழு சிறப்பாக
-
உ.பி., என்கவுன்டரில் 4 பேர் சுட்டுக்கொலை தேடப்பட்டு வந்த குற்றவாளிகள்
21 Jan 2025லக்னோ: உத்தரபிரதேசத்தில் நடந்த போலீஸ் என்கவுன்டரில் தேடப்பட்டு வந்த 4 குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
சிவகங்கையில் ரூ.1 கோடியில் நிறுவப்பட்டுள்ள மருது சகோதரர்களுக்கு திருவுருவச் சிலைகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல்
21 Jan 2025சென்னை : மருது சகோதரர்களுக்கு சிவகங்கையில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் திருவுருவச் சிலைகள் அமைக்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன.
-
டெல்லி சட்டசபை தேர்தலில் 699 வேட்பாளர்கள் போட்டி கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரம்
21 Jan 2025புதுடெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் 699 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட உள்ளனர் என்று டெல்லி தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
ஏ.எம். ரத்னம் வழங்கும் ஹரி ஹர வீரமல்லு
21 Jan 2025மெகா சூர்யா புரொடக்ஷன் ஏ. தயாகர் ராவ் தயாரிப்பில், ஏ.எம்.
-
10 ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வு செய்து உருவாக்கப்பட்ட பரந்தூர் விமான நிலைய திட்டம் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்படுத்தப்படும் - தமிழ்நாடு அரசு மீண்டும் விளக்கம்
21 Jan 2025சென்னை : பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டம் 10 ஆண்டுகளுக்கும் மேலாகவே ஆய்வு செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
-
நரலோகேஷ்தான் அடுத்த முதல்வர்: ஆந்திர அமைச்சர் பேச்சால் சர்ச்சை
21 Jan 2025அமராவதி: ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனான நர லோகேஷ், முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அமைச்சர் டி. ஜி. பரத்.
-
நவீன் D கோபால் இயக்கும் உசுரே
21 Jan 2025ஸ்ரீ கிருஷ்ணா புரொடக்ஷன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் நவீன் டீ கோபால் இயக்கத்தில் தமிழ் தெலுங்கு மொழிகளில் தயாராகி வரும் திரைப்படம் உசுரே.
-
கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க டாஸ்மாக் கடைகளில் கியூ.ஆர் கோடு முறையில் மார்ச் முதல் மது விற்பனை : சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
21 Jan 2025சென்னை : டாஸ்மாக் மதுபான கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பதை தடுக்கும் வகையில், வரும் மார்ச் மாதம் முதல் கியூ.
-
இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5-ல் அரசு விடுமுறை
21 Jan 2025ஈரோடு : இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் 5ம் தேதி அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றார் டிரம்ப்
21 Jan 2025வாஷிங்டன் : அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றார். சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ராபர்ட்ஸ் ஜுனியர், டிரம்புக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
-
அதிபர் டிரம்புடன் விருந்து: ஒரேயொரு இரவு விருந்தில் ரூ.2 ஆயிரம் கோடி வருவாய்
21 Jan 2025வாஷிங்டன் : டிரம்புடன் இரவு விருந்து சாப்பிட, பேச பெருந்தொகையை அளிக்க உலகின் மிக பெரிய தொழிலதிபர்கள் பலரும் அதிக ஆர்வம் காட்டினர்.
-
கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.3.53 லட்சம் கோடி கடன் : எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு
21 Jan 2025சேலம் : கடந்த நான்கு ஆண்டுகளில் அவர்கள் ரூ.3.53 லட்சம் கோடி கடன் வாங்கியது தான் சாதனை, தி.மு.க., ஆட்சியில் எந்த சாதனையும் இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச
-
ஈரோடு கிழக்கில் சுயேட்சையாக போட்டி: அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பிரமுகர் தி.மு.க.வில் இணைந்தார்
21 Jan 2025ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட அ.தி.மு.க. நிர்வாகி செந்தில்முருகன் தி.மு.க.வில் இணைந்தார்.
-
மருத்துவக் கல்லூரிகள் குறித்து விமர்சனம்: ஜெய்ராம் ரமேசுக்கு தமிழிசை கண்டனம்
21 Jan 2025சென்னை : மருத்துவக் கல்லூரிகளின் தரம் குறைந்து உள்ளதாக விமர்சனம் செய்த ஜெய்ராம் ரமேசுக்கு- தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்.