எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சென்னை மெட்ரோ ரெயில் கட்டணத்தை குறைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் அதிகரித்து வரும் வாகன பெருக்கமும், மக்கள்தொகை நெருக்கமும் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. நகரின் பல்வேறு பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்ட போதிலும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படவில்லை.
இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் தொழில்நுட்ப வல்லுனர்கள், பொறியாளர்கள் பல்வேறு கட்ட ஆய்வுகள் நடத்தி மெட்ரோ ரெயில் திட்டத்தை கொண்டு வந்தனர். சுமார் ரூ. 22 ஆயிரம் கோடியில் மெட்ரோ ரெயில் திட்டம் சென்னையில் செயல்படுத்தப்பட்டது.
சென்னை விமான நிலையம் - வண்ணாரப் பேட்டை வரை ஒருவழித்தடமும், விமான நிலையம் - சென்ட்ரல் வரை மற்றொரு வழித்தடத்திலும் மொத்தம் 45 கி.மீ. தூரத்திற்கு முதல் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட்டது. முதல் கட்டமாக உயர்மட்ட பாதையிலும், பின்னர் சுரங்கப் பாதையிலும் படிப்படியாக சேவை விரிவாக்கம் செய்யப்பட்டது.
2015-ம் ஆண்டு முதல் சென்னையில் மெட்ரோ ரெயில் ஓடத்தொடங்கியது. சேவை தொடங்கியது முதலே கட்டணம் உயர்வாக இருப்பதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர். ஏழை, நடுத்தர மக்களும் பயணம் செய்யும் வகையில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இதற்கிடையில் வண்ணாரப்பேட்டை- விம்கோ நகர் இடையே கடந்த 14-ம் தேதி சேவை தொடங்கி வைக்கப்பட்டது. ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச கட்டணம் ரூ. 60 ஆக இருந்த நிலையில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிக்கு சேவை நீட்டிக்கப்பட்டதால் அதிகபட்ச கட்டணம் ரூ.70 ஆக உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மெட்ரோ ரெயில் கட்டணத்தை குறைத்து நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மறைந்த முதல்வர் ஜெயலலிதா சென்னை மாநகரத்தை உலகத்தரத்திற்கு மேம்படுத்த, பல்வேறு சிறப்பான உட்கட்டமைப்பு திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தினார். பெரு நகரான சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகவும், மக்களின் பயண நேரத்தைக் குறைப்பதற்காகவும், பயணம் எளிமையாகவும், வசதியாகவும் அமைய, தொலைநோக்குப் பார்வையோடு, மெட்ரோ ரெயில் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்தார்.
அம்மா அரசும், சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தை மிகுந்த முனைப்புடன் செயல்படுத்தி வருகின்றது. அதன் விளைவாகத்தான், இன்று இத்திட்டத்தின் முதல் கட்டம் முழுமையாக முடிக்கப்பட்டு சேவை சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
118.90 கி.மீ. நீளத்திலான சென்னை மெட்ரோ ரெயில் 2-வது கட்டத்துக்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
5 ஆண்டுகள் மெட்ரோ சேவையை வெற்றிகரமாக முடித்து, 6-ம் ஆண்டில் தனது சேவையைத் தொடர்கிறது. இதுவரை 7.25 கோடி பயணிகள் மெட்ரோ ரெயில் சேவைகளைப் பயன்படுத்தியுள்ளனர்.
மெட்ரோ ரெயில் சேவையை பெருவாரியான பொதுமக்கள் பயன்படுத்தும் வண்ணம், அதன் கட்டணம் குறைக்கப்பட வேண்டும் என்று பொதுமக்களிடம் பெறப்பட்ட கோரிக்கைகளை ஏற்று மெட்ரோ ரெயில் கட்டணம் குறைக்கப்படும் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
கியூ.ஆர். கோடு மற்றும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தொடுதல் இல்லா மதிப்புக் கூட்டு பயண அட்டை மூலம் பயணிப்பவர்களுக்கு மேலும் கூடுதலாக அனைத்து பயணச்சீட்டுகளுக்கும் அடிப்படைக் கட்டணத்தில் இருந்து 20 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும்.
ஒரு நாள் வரையறுக்கப்படாத மெட்ரோ பயணம் - தற்போதுள்ள கட்டம்-1ன் 45 கி.மீ வழித்தடப்பகுதிகளுக்கான கட்டணம் 100 ரூபாய் ஆகும். தற்போது துவக்கப்பட்டுள்ள வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான 9 கி.மீ. நீள கூடுதல் வழித்தடத்திற்கும் சேர்த்து மொத்தம் 54 கி.மீ வழித்தடத்திற்கும் அதே 100 ரூபாயாகவே இருக்கும்.
ஒரு மாத வரையறுக்கப்படாத மெட்ரோ பயணம் - தற்போதுள்ள கட்டம்-1-ன் 45 கி.மீ வழித்தடப் பகுதிகளுக்கான கட்டணம் 2500 ரூபாய் ஆகும். தற்போது துவக்கப்பட்டுள்ள வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான 9 கி.மீ. நீள கூடுதல் வழித்தடத்திற்கும் சேர்த்து மொத்தம் 54 கி.மீ வழித்தடத்திற்கும் அதே 2500 ரூபாய் கட்டணம்தான்.
ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் கட்டணத்தில் இருந்து 50 சதவீத தள்ளுபடி. (வரையறுக்கப்படாத பயண அனுமதி சீட்டுகள் மற்றும் வரையறுக்கப்பட்ட நாட்களில் செல்லுபடியாகும் அனுமதி சீட்டுகள் நீங்கலாக)
இந்த ஆணை நாளை (22-ம் தேதி) முதல் அமலுக்கு வருகின்றது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நடைமுறைபடுத்தப்படவுள்ள இந்தக் கட்டணக் குறைப்பை பயன்படுத்தி, பொதுமக்கள் தங்களது பயணங்களை குறைந்த செலவில், நிறைவாக மேற்கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 5 days ago |
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 32,240 கன அடியாக அதிகரிப்பு
04 Dec 2024சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 32,240 கன அடியாக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 1.82 அடி உயர்ந்தது.
-
நமீபியாவின் ஜனாதிபதியாக பதவியேற்கும் முதல் பெண்
04 Dec 2024விண்ட்ஹோக்: நமீபியாவின் ஜனாதிபதியாக முதல் முறையாக ஒரு பெண் பதவியேற்க உள்ளார்.
-
நாடாளுமன்ற வளாகத்தில் இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்
04 Dec 2024புது டெல்லி: அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் நேற்று நாடாளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுப
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-12-2024.
04 Dec 2024 -
அர்ஜூன் சம்பத் மகனுக்கு ஐகோர்ட் நிபந்தனை ஜாமீன்
04 Dec 2024சென்னை, அர்ஜூன் சம்பத் மகனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
மலேசியா, தாய்லாந்தில் மழை,வெள்ளத்திற்கு 30 பேர் உயிரிழப்பு
04 Dec 2024கோலாலம்பூர்: மலேசியா மற்றும் தாய்லாந்தில் பெய்த மழை வெள்ளத்திற்கு இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
1.17பில்லியன் டாலர் மதிப்பீட்டில் இந்தியாவிற்கு ஹெலிகாப்டர் உபகரணங்கள் வழங்க அதிபர் பைடன் நிர்வாகம் ஒப்புதல்
04 Dec 2024வாஷிங்டன்: 1.17பில்லியன் டாலர் மதிப்பீட்டில் இந்தியாவிற்கு மல்டி மிஷன் ஹெலிகாப்டர் உபகரணங்களை வழங்குவதற்கு அதிபர் பைடன் நிர்வாகம் ஒப்புதல்அளித்துள்ளது.
-
பெஞ்சல் புயல் பாதிப்பால் உயிரிழந்த மின்வாரிய ஊழியரின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம்: முதல்வர் ஸ்டாலின்
04 Dec 2024சென்னை: திருவண்ணாமலை மாவட்டத்தில் பெஞ்சல் புயல் பாதிப்பு காரணமாக உயிரிழந்த மின்சார வாரிய ஊழியரின் குடும்பத்தினருக்கு ரூ.
-
புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு கேரளா துணை நிற்கும்: பினராய் அறிவிப்பு
04 Dec 2024திருவனந்தபுரம்: பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு கேரளா துணை நிற்கும் என்று அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.
-
இந்திய கடற்படை தினம்: பிரதமர் மோடி வாழ்த்து
04 Dec 2024புது டெல்லி: ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4-ம் தேதியை கடற்படை தினமாக இந்தியா கொண்டாடுகிறது.
-
தொழில்நுட்ப கோளாறு: பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் ஏவுதல் இன்றைக்கு ஒத்திவைப்பு
04 Dec 2024சென்னை: தொழில்நுட்ப கோளாறு காரணமாக பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் ஏவுதல் இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
-
வருகிற 12-ம் தேதி நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கல்யாணம்
04 Dec 2024கோவா, நடிகை கீர்த்தி சுரேஷுக்கு வருகிற 12-ந் தேதியில் கோவாவில் திருமணம் நடைபெற உள்ளது.
-
ஓய்வு பெறும் வயதை 64 ஆக உயர்த்தியது சிங்கப்பூர் அரசு
04 Dec 2024சிங்கப்பூர் சிட்டி: பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 64 ஆகவும், மறு பணியமர்த்தப்படும் வயதுக்கான உச்சவரம்பு 69 ஆகவும் அதிகரித்து சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.
-
புயல் பாதித்த 3 மாவட்டங்களில் தமிழக அரசு நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த உத்தரவு
04 Dec 2024சென்னை, விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பெருமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக பாதுகாப்பாக தங்குமிட வசதி தேவையான உணவு, பால், குடிநீர், ம
-
வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஜனவரியில் அரையாண்டு தேர்வு அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
04 Dec 2024சென்னை: வெள்ளம் பாதித்த பகுதிகளில் அரையாண்டுத் தேர்வு எழுத முடியாத நிலை இருந்தால் ஜனவரியில் தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
-
தி.மலை மண் சரிவில் உயிரிழந்த 7 பேரின் உடலுக்கு அமைச்சர் எ.வ.வேலு அஞ்சலி
04 Dec 2024தி.மலை: திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் உடலுக்கு அமைச்சர் எ.வ.வேலு, துணை சபாநாயகர் பிச்சாண்டி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
-
சம்பல் மாவட்டத்திற்கு செல்ல முயன்ற ராகுல் காந்தி உ.பி., எல்லையில் போலீசாரால் தடுத்து நிறுத்தம்
04 Dec 2024லக்னோ, வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள சம்பல் மாவட்டத்திற்கு செல்ல முயன்ற ராகுல், பிரியங்கா காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
-
விழுப்புரத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
04 Dec 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
-
ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்
04 Dec 2024குன்னூர் : ரெயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு, மரங்கள் விழும் அபாயம் இருந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலை ரெயில் சேவை 2 நாட்கள் ரத்து செய்யப்பட்டது.
-
ஹரித்துவாரில் கங்கை நீர் குடிப்பதற்கு உகந்தது அல்ல மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்
04 Dec 2024டேராடூன்: ஹரித்துவாரில் கங்கை நீர் குடிப்பதற்கு உகந்தது அல்ல என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
-
தென்கொரியாவில் அவசரநிலை பிரகடனம் ஒரே நாளில் வாபஸ்
04 Dec 2024சியோல்: தென்கொரியாவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு சில மணி நேரங்களில் எதிர்கட்சிகளின் போராட்டத்தால் அது ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
எருமேலி, புல்மேடு வனப்பாதையில் மீண்டும் பக்தர்களுக்கு அனுமதி சபரிமலை கோவில் நிர்வாகம் அறிவிப்பு
04 Dec 2024திருவனந்தபுரம்: எருமேலி, புல்மேடு வனப்பகுதியில் நேற்று முதல் பக்தர்கள் செல்ல மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
ஃபென்ஜல் புயல் நிவாரணத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம் நிதி
04 Dec 2024சென்னை : ஃபென்ஜல் புயல் நிவாரணப் பணிகளுக்கு, நடிகர் சிவகார்த்திகேயன் ரூ. 10 லட்சத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார்.
-
புயல் நிவாரண நிதியை நான்கு மடங்கு உயர்த்தி வழங்க அரசுக்கு ஓ.பி.எஸ். கோரிக்கை
04 Dec 2024சென்னை, முதல்வர் ஸ்டாலின் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புயல் நிவாரண உதவிகளை நான்கு மடங்கு உயர்த்திக் கொடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்
-
சென்னை மாநிலக் கல்லூரியில் ரூ. 21.60 கோடியில் புதிய விடுதிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
04 Dec 2024சென்னை: சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் ரூ.21.60 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சிறப்பு மாணவர் மற்றும் மாணவியர் விடுதி கட்டிடங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்று தி