முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குவைத்தில் 2017-க்குப் பின் முதன்முறையாக ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் 7 பேருக்கு மரண தண்டனை

வியாழக்கிழமை, 17 நவம்பர் 2022      உலகம்
Kuwait--2022 11 17

குவைத்தில் 2017-ம் ஆண்டுக்குப் பின்னர் முதன்முறையாக 2 பெண்கள் உள்பட 7 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இது குறித்து அரசுக்குச் சொந்தமான குனா செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின் படி, பல்வேறு குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட 7 பேர் மத்திய சிறைச் சாலையில் நேற்று முன்தினம் தூக்கிலிடப்பட்டனா். மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவா்களில் 3 குவைத் நாட்டு ஆண்கள், ஒரு குவைத் நாட்டுப் பெண், ஒரு சிரியா நாட்டவா், ஒரு பாகிஸ்தானியா், ஒரு எத்தியோப்பிய பெண் அடங்குவா் என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மனிதா்களின் மிகவும் புனிதமான உரிமையாகிய உயிர் வாழும் உரிமையை அவா்கள் பிறரிடமிருந்து பறித்ததால் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அரசுத் தரப்பு நீதித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. கடைசியாக 2017 ஜனவரி 25-ம் தேதி அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட 7 பேர் தூக்கிலிடப்பட்டனர்.  இந்த தண்டனைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஆம்னெஸ்டி பொது மன்னிப்பு சபை, இதுபோன்ற தண்டனைகளை உடனடியாக நிறுத்த வேண்டும். இவை கொடூரமானவை, மனிதத்தன்மையற்றவை மற்றும் கீழ்த்தரமானவை என்று விமர்சித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து