முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

பிளம்ஸ் பழத்தின் மருத்துவ பயன்கள்

  1. பிளம்ஸ் பழத்தில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகமாக இருப்பதால் உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரித்து நமது உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கு உதவுகிறது,மேலும் ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களை அதிகரித்து, ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
  2. உடலில் உள்ள தேவையற்ற  கெட்ட கொழுப்புகள் மற்றும் கெட்ட நீரை வெளியேற்ற  பிளம்ஸ் பழம் உதவுகிறது.
  3. நாம் சாப்பிடும் அனைத்து உணவுகளும் செரிமானம் செய்ய நார்ச் சத்து உதவுகிறது,பிளம்ஸ் பழத்தை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு செரிமான உறுப்பு பிரச்சனை, மலச்சிக்கல் பிரச்சனைகளை சரிசெய்கிறது. 
  4. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பல வகையான உணவுகளை உண்ணும் போது அதனோடு பிளம்ஸ் பழத்தை சேர்த்து சாப்பிட்டால், உடலில் கொழுப்புகள் சேராமல் எடையை கட்டுக்கோப்புடன் வைக்க உதவுகிறது.
  5. நீரிழிவு மற்றும் இதய நோயை எதிர்த்து போராட உதவுகிறது. இது கொழுப்பை குறைக்கிறது. இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும்,
  6. கண்  பார்வைத்திறனை மேம்படுத்த பிளம்ஸ் பழம் உதவுகிறது.
  7. பிளம்ஸ் பழங்களில் உள்ள சத்துக்கள் தலைமுடி உதிர்வை தடுக்கிறது. இதில் வைட்டமின் ஏ சத்துக்கள் அதிகமாக உள்ளதால் முடி கொட்டுவதை தடுக்கிறது. மேலும் இளம் வயதில் நரை முடி பிரச்சனையை போக்குகிறது.
  8. தோலில் ஏற்படும் காயங்கள், தழும்புகள் ஆகியவை குணமாக தினமும் ஒரு பிளம்ஸ் பழத்தை சாப்பிட்டு வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும். 
  9. கர்ப்பிணி பெண்கள் பிளம்ஸ் பழம் சாப்பிடுவதால் இப்பழத்தில் உள்ள போலிக் அமிலம் வயிற்றில் உள்ள குழந்தைக்கு ஆரோக்கியத்தை தருகிறது. எனவே கர்ப்பிணி பெண்கள் பிளம்ஸ் பழங்களை சாப்பிட்டு வருவது நல்லது. 
  10. பிளம்ஸ் பழத்தில் உள்ள மெக்னீசியம் சத்து உடலின் தசைகள் மற்றும் நரம்புகளின் சீரான செயலாற்றலுக்கு உறுதுணையாக இருக்கிறது.பிளம்ஸ் பழம் மட்டுமே இப்படிப்பட்ட தனித்துவமான நன்மையை தரக்கூடியதாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 weeks ago