முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலைநகரம்-2 விமர்சனம்

ஞாயிற்றுக்கிழமை, 25 ஜூன் 2023      சினிமா
Capital-2-Review 2023 06

Source: provided

சுந்தர் சி, பாலக் லால்வானி, பாகுபலி பிரபாகர், ஜெய்ஸ் ஜோஸ், தம்பி ராமையா, ஐரா உள்ளிட்ட பலர் நடிப்பில் வி. இசட். துரை இயக்கத்தில் தற்போது வெளியாகி இருக்கும் படம் தலைநகரம் 2 . இயக்குநராக இருந்த சுந்தர். சி கதாநாயகனாக நடித்த முதல் படம் தலைநகரம். இதன் தொடர்ச்சியாக இப்போது தலைநகரம் 2 வந்துள்ளது. கதை, ரவுடி தொழிலை கைவிட்டு விட்டு நண்பர் தம்பி ராமையாயுடன் இணைந்து ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடுகிறார் சுந்தர் சி. இந்நிலையில் நடிகை பாலக் லால்வானியை சிலர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குகிறார்கள். இந்தப் பிரச்சனையில் தேவையில்லாமல் தம்பி ராமையா சிக்குகிறார். அவரை இந்த சிக்கலிருந்து விடுவிக்க சுந்தர் சி மீண்டும் ரவுடியாக மாறுகிறார். சென்னையை ஆட்டிப்படைக்கும் மூன்று பிரபல ரவுடிகளுக்கும், சுந்தர். சிக்கும் இடையேயான மோதல்களும், இறுதியில் யார் வெல்கிறார்கள்? என்பதும் தான் படத்தின் திரைக்கதை. சுந்தர். சி ஓய்வு பெற்ற ரவுடி கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். அதிலும் ஆக்ஷன் காட்சிகளில் அதகளம் செய்திருக்கிறார். வழக்கமாக போலீஸ் தொடர்பான காட்சிகளும், அணுகுமுறையும் பலவீனமாக இருப்பதால் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் சுமார் தான். இருந்தாலும் இயக்குநர் வி இசட் துரையின் உழைப்பு பல இடங்களில் எதிர்பாராதவையாக இருப்பதால் பார்வையாளர்களை இப்படம் வசீகரிக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து