முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இண்டியா கூட்டணியில் சேர அழைக்காதது குறித்து எனக்கு கவலை இல்லை: ஓவைசி

ஞாயிற்றுக்கிழமை, 17 செப்டம்பர் 2023      இந்தியா
Owaisi 2023-09-17

Source: provided

புதுடெல்லி : இண்டியா கூட்டணியில் சேர அழைக்கப்படாதது குறித்து எனக்கு கவலை இல்லை என்று ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார். 

அடுத்தாண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்ள காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்ட மிகப்பெரிய கூட்டணி தான் இண்டியா கூட்டணி. இண்டியா கூட்டணி கட்சிகள் இதுவரை மூன்று ஆலோசனை கூட்டங்களை நடத்தி உள்ளது. 

இம்மாதம் தொடக்கத்தில் மும்பையில் இந்தியா கூட்டணியின் மூன்றாவது ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் 28 கட்சிகளை சேர்ந்த 63 தலைவர்கள் பங்கேற்றனர். 

இந்நிலையில், இண்டியா கூட்டணியில் சேர அழைக்கப்படாதது குறித்து ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறியதாவது:- 

இண்டியா கூட்டணியில் சேர அழைக்கப்படாதது குறித்து எனக்கு கவலை இல்லை. பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மற்றும் மராட்டியத்தை சேர்ந்த பல கட்சிகளும் இந்த கூட்டணியில் உறுப்பினர்களாக இல்லை.  

தெலுங்கானா முதல்வர் சந்திரசேதரராவை முன்னோக்கிச் சென்று மூன்றாவது அணியை உருவாக்கி, இதில் பல கட்சிகளை எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். சந்திரசேகரராவ் தலைமை ஏற்றால் அரசியல் வெற்றிடம் நிரப்பப்படும் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து