முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெர்மனியில் களைகட்டிய உலகின் மிக பெரிய பீர் திருவிழா

திங்கட்கிழமை, 25 செப்டம்பர் 2023      உலகம்
Germany 2023-09-25

Source: provided

ஜெர்மனி : உலகின் மிக பெரிய பீர் திருவிழா ஜெர்மனியின் முனிச் நகரில் களைகட்ட தொடங்கியது. 

ஜெர்மனியில் உள்ள முனிச் நகரில் கடந்த 1810-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த பீர் திருவிழா அந்த நாடு பட்டத்து இளவரசர், பட்டத்து இளவரசியின் திருமண நாளை நினைவுகூரும் விழாவாகும்.

செப்டம்பர் மாதம் 2-வது வாரம் தொடங்கி அக்டோபர் 3-ம் தேதி வரை இந்த பீர் திருவிழா நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த பீர் திருவிழாவில் 60 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். தற்போது 34 லட்சம் பேர் திரண்டு பீர் திருவிழாவை கொண்டாடி வருகின்றனர்.

உலக பிரசித்திபெற்ற முனிச் பீர் திருவிழாவில் அமெரிக்கா, ஆஸ்திரியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்துள்ள மது பிரியர்கள் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் திளைத்து வருகின்றனர். 

பேண்டு வாத்தியங்கள் முழங்க பாரம்பரிய உடை அணிந்த ஆண்கள், பெண்கள் மெய்மறந்து உற்சாகத்தில் மிதந்தனர். கொரோனா காலமாக கடந்த 3 ஆண்டுகளாக கலைகாட்டாத இந்த பீர் திருவிழா மீண்டும் பழைய குதூகலத்தை எட்டியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து