முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரே நாடு, ஒரே தேர்தல்: மாநிலங்கள் ஒப்புதல் அளிக்கத் தேவையில்லை?சட்ட ஆணையம் பரிந்துரைக்கலாம் என தகவல்

வியாழக்கிழமை, 28 செப்டம்பர் 2023      இந்தியா
Central-government 2021 12-

Source: provided

புது டெல்லி:ஒரே நாடு, ஒரே தேர்தல் முறைக்கான அரசியலமைப்புத் திருத்தங்களுக்கு மாநிலங்கள் ஒப்புதல் அளிக்கத் தேவையில்லை என 22-வது சட்ட ஆணையம் பரிந்துரைக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நாட்டில் மக்களவை, மாநில சட்டப்பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவது குறித்த சாத்தியக்கூறை ஆராய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டது. 

இந்நிலையில் இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் பணியில் மத்திய சட்ட ஆணையம் ஈடுபட்டுள்ளது. இது குறித்து ஆய்வு செய்து 22-வது சட்ட ஆணையம் அறிக்கை அளிக்கும். அதன் அடிப்படையில் உயர்நிலைக் குழு விவாதித்து முடிவெடுக்கும் என்று தெரிகிறது. 

இந்நிலையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறைக்கு அரசியலமைப்பு விதிகள் மற்றும் பிற சட்டங்களின் சில விதிகளிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.   ஆனால், இந்த அரசியலமைப்புத் திருத்தங்களுக்கு மாநிலங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டிய அவசியமில்லை என்று சட்ட ஆணையம் பரிந்துரைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. 

எதிர்க்கட்சிகள் ஆளும் பல மாநிலங்கள், ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை எதிர்த்து வரும் நிலையில், இதற்கான அரசியலமைப்பு திருத்தங்களுக்கு மாநிலங்களின் ஒப்புதல் தேவையில்லை என்று ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து