முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

கொத்தமல்லியின் மருத்துவ குணங்கள்

  1. கொத்தமல்லி இலைகளில் விட்டமின் சி மற்றும் விட்டமின் ஈ, விட்டமின் ஏ சத்துக்கள் உள்ளன,இவை நம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது, விட்டமின் சி இரத்த வெள்ளை அணுக்களை திறம்பட செயல்பட உதவுகிறது.
  2. கொத்தமல்லி ஜீரணத்திற்கு உறுதுணையாக அமைவதோடு வயிறு தொடர்பான பிரச்சனைகளும் தவிர்க்கப்படுகின்றன. 
  3. கொத்தமல்லி தேவையில்லாத கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றும்.
  4. கொத்தமல்லி செரிமான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, குமட்டல் போன்ற பல்வேறு செரிமான பிரச்சினைகளுக்கு உதவுகிறது.
  5. கொத்தமல்லி உடலைக் குளிர்ச்சியாக்கும்,உடல் வெப்பத்தை சமநிலைபடுத்தும்.
  6. கொத்தமல்லி உடலின் செரிமான சக்தியைத் தூண்டி, உண்ட உணவை நன்கு சீரணம் ஆகச் செய்யும்.
  7. எலுமிச்சை சாறு,கொத்தமல்லி இலை சாறு கலந்து பருகி வந்தால்  வாய் புண் மற்றும் வயிற்று புண் குணமாகும்.
  8. கொத்தமல்லி இலைகளை அரைத்து முகத்தில் பூசுவதால் தோல் சுருக்கம் மற்றும் தோல் கருமை மறையும்.
  9. கொத்தமல்லி அரைத்து கண்களுக்கு மேலெ பற்று போடுவதால், கண் பிரச்சனைகள் குறைகிறது. கண்களுக்கு பலம் கிடைக்கிறது. கண்கள் பிரகாசம் ஆகிறது.
  10. மாதவிலக்கு ஒழுங்கின்மை உடைய பெண்கள் தினம் கொத்தமல்லி இலை ஜூஸ் அருந்துவது நல்லது.
  11. ஒவ்வாமை காரணமாக தோலில் ஏற்படும் நோய்களுக்கு கொத்தமல்லி இலை நிவர்த்தி அளிக்கவல்லது.
  12. கொத்தமல்லி இலைகளை உணவில்,பருப்புகளில், சாம்பார் ஜூஸ்களில் சேர்த்து சாப்பிடலாம்.
  13. கொத்தமல்லி இலைகள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கவும் சருமத்தை ஆற்றவும், சீரண சக்தியை எளிதாக்கவும்,எலும்பு ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.
  14. கொத்தமல்லியை சாப்பிடுவதால் பெண்களுக்கு கருப்பை வலுப்படும்,
  15. தினமும் நாம் உண்ணும் உணவில் ஏதோ ஒரு விதத்தில் கொத்தமல்லியை சேர்த்து வந்தால் நோயற்ற ஆரோகியமான வாழ்வை வாழலாம். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 weeks ago