முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

குப்பைமேனியின் மருத்துவ பயன்கள்

 

  1. குப்பைமேனி இலைச் சாற்றைக் சாப்பிட்டு வந்தால் தேமல் மற்றும் சொறி, சிரங்குகள் குணமாகும்.
  2. குப்பைமேனி இலை சிறிது மஞ்சள், உப்பு அறைத்துப் உடலில் பூசி சற்றுநேரம் கழித்து குளிக்க தோல்கள் நோய்கள் அனைத்தும் தீரும்.
  3. குப்பைமேனி இலையை காயவைத்து பொடியாக்கி மூக்கில் இட தலைவலி நீங்கும்.
  4. கொசுக்கடி அல்லது அலர்ஜி காரணமாக தோலில் ஏற்படும் தடிப்புக்கு குப்பைமேனியின் இலைச் சாற்றை, தேங்காய் எண்ணெயில் சேர்த்துக்  கொதிக்கவைத்துத்  தடவலாம்.
  5. குப்பைமேனி இலைச் சாற்றைக் கொடுக்கும்போது கோழையையும் வெளியேற்றும், உடல் சுத்தமாகும்.
  6. தலைபாரத்துக்கு குப்பைமேனி இலையை அரைத்து, நெற்றியில் பற்றுபோடலாம்.
  7. குப்பைமேனிக்கு விஷக்கடி, நோய்களைக் குணப்படுத்தும் தன்மை உண்டு.
  8. குப்பைமேனி பெண்களுக்கு வளரும் தேவையற்ற முடிகளை நீக்கும்.
  9. கால் அரையிடுக்குகளில் கடும் அரிப்பைக் கொடுத்து, அந்த இடத்தைக் கருமையாக்கி, தோல் தடிப்புற்று, அரிப்போடு நீர்ச்சுரப்பாக மாறும் பூஞ்சைத்தொற்றுக்கு, குப்பைமேனியும் மஞ்சளும் சேர்த்து அரைத்துப் பூசலாம்.
  10. குப்பைமேனி இலைச்சாறை மூன்று நாட்கள் மாலையில் கொடுக்க, புழுத்தொல்லை தீரும்,புழு மீண்டும் வராது.
  11. மூட்டு வலிக்கு குப்பைமேனி இலையை சாறு பிழிந்து நல்லெண்ணெய்யுடன் காய்ச்சி தேய்த்து வர மூட்டு வலி குணமாகும்.
  12. குப்பைமேனி சளி,இருமல் நோய்களைக் குணப்படுத்தும் தன்மை உண்டு.
  13. குப்பைமேனி விதைகளை எண்ணெயிலிட்டு காய்த்து, தலையில் தேய்த்துக் குளித்து வர தலைமுடி நன்கு வளரும், பொடுகு மறையும்.
  14. குப்பைமேனி சர்க்கரைநோய்,பாத எரிச்சல் நோய்களைக் குணப்படுத்தும் தன்மை உண்டு.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 weeks ago